Published : 31 Mar 2019 09:52 AM
Last Updated : 31 Mar 2019 09:52 AM
படித்த, பணியாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் பகுதியையும் உள்ளடக்கிய தொகுதி. வெளி மாநிலத்தவர்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி இது. அதிகமான மக்கள் நெருக்கமும், வணிக, வர்த்தக நிறுவனங்களும் உள்ள பகுதி.
சென்னையில் வர்த்தக மையப்பகுதியாக விளங்கும் தியாகராய நகரும் இந்த தொகுதிகள் அமைந்துள்ளது.
முரசொலி மாறன், டி.ஆர்.பாலு போன்ற திமுக மூத்த தலைவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த வெங்கட்ராமன் போன்றவர்களும் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. திமுகவை தவிர தேசியக்கட்சிகளுக்கும் ஒரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி.
காங்கிரஸ் சார்பில் வைஜெயந்தி மாலா போட்டியிட்டு வென்ற தொகுதி. பாஜகவைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் இங்கு போட்டியிட்ட போதிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 2 தேர்தல்களில் அதிமுகவே இந்த தொகுதியில் முத்திரை பதித்து வருகிறது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
மயிலாப்பூர்
தி.நகர்
சைதாப்பேட்டை
விருகம்பாக்கம்
வேளச்சேரி
சோழிங்கநல்லூர்
தற்போதைய எம்.பி
ஜெயவர்த்தன், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | ஜெயவர்த்தன் | 438404 |
திமுக | டி.கே.எஸ் இளங்கோவன் | 301779 |
பாஜக | இல.கணேசன் | 256786 |
காங் | ரமணி | 24420 |
ஆம் ஆத்மி | ஜாகிர் உசேன் | 17312 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1971 | முரசொலி மாறன், திமுக | நரசிம்மன், சுதந்திரா கட்சி |
1977 | வெங்கட்ராமன், காங் | முரசொலி மாறன், திமுக |
1980 | வெங்கட்ராமன், காங் | சுலோச்சனா சம்பத், அதிமுக |
1984 | வைஜெயந்தி மாலா, | காங் இரா.செழியன், ஜனதா |
1989 | வைஜெயந்தி மாலா, காங் | ஆலடி அருணா, திமுக |
1991 | ஸ்ரீதரன், அதிமுக | டி.ஆர்.பாலு, திமுக |
1996 | டி.ஆர்.பாலு, திமுக | கணேசன், அதிமுக |
1998 | டி.ஆர்.பாலு, திமுக | ஜனா.கிருஷ்ணமூர்த்தி, பாஜக |
1999 | டி.ஆர்.பாலு, திமுக | தண்டாயுதபாணி, காங் |
2004 | டி.ஆர்.பாலு, திமுக | பதர் சயீத், அதிமுக |
2009 | ராஜேந்திரன், அதிமுக | ஆர்.எஸ்.பாரதி, திமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
மயிலாப்பூர் : கே. நட்ராஜ், அதிமுக
தி.நகர் : சத்திய நாராயணன், அதிமுக
சைதாப்பேட்டை : மா.சுப்பிரமணியன், திமுக
விருகம்பாக்கம் : விருகை ரவி, அதிமுக
வேளச்சேரி : வாகை சந்திரசேகர், திமுக
சோழிங்கநல்லூர் : அரவிந்த் ரமேஷ், திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)
தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
இசக்கி சுப்பையா (அமமுக)
ரங்கராஜன் (மநீம)
ஷெரின் (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT