Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

112 - அவினாசி (தனி)

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதி.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 31 ஊராட்சிகளும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகள் என, மொத்தம் 47 கிராம ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் ஆகிய 3 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் கோவை மாவட்டத்திலும் உள்ளது.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகளவில் ஆதிதிராவிடர்களும், 2-ம் இடத்தில் கொங்கு வேளாளர்களும், 3-வதாக நாயக்கர் மற்றும் இதர வகுப்பினர்களும் உள்ளனர். கொங்கு 7 சிவஸ்தலங்களில், பாடல் பெற்ற தலமாக, அவிநாசியி்ல் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாலிங்கேஸ்வரர் கோயிலும், திருமுருகன்பூண்டி திருமுருநாதசாமி கோயிலும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. சிறப்பு வாய்ந்த திருமுருகன்பூண்டியை புரதான நகரமாக, தமிழக அரசு அறிவித்து சீரமைப்பு நிதியும் ஒதுக்கியது. அதேபோல், அன்னூரில் மன்னீஸ்வரர் கோயிலும் வெகு பிரசித்தம்.

அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி, பம்பு செட் உற்பத்தி, உள்ளூர் பனியன் உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக உள்ளன. திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். தற்போது, இயற்கை வேளாண்மையில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்குரிய வசதிகளை அரசு செய்துதரவேண்டும்.

அவிநாசி, அன்னூர் பகுதிமக்களுக்கு முக்கியமாக பவானி ஆற்றுக்குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது அன்னூர்-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறுகிறது.

60 ஆண்டுகால தலையாய கோரிக்கையான அவிநாசி- அத்திக்கடவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும், பாசனம் பெருகும். விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், அவிநாசி-அத்திக்கடவு திட்டம் இடம்பெறும். ஆனால், திட்டம் நிறைவேறியதில்லை. ஆனால், சமீபத்தில் போராட்டக்குழுவின் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து, இத்திட்டத்திற்கு தமிழகஅரசு நிர்வாக அனுமதி வழங்கி, முதற்கட்டப் பணி தொடங்க ரூ.3கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடும் தற்போது செய்துள்ளது.

அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டப்பணிகள், தொடக்கநிலையை கடந்து,வெகுவிரைவிலேயே பணிகளை முடிக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் பயிற்சி கல்லூரியை தொகுதியில் ஏற்படுத்த வேண்டும். அவிநாசி ஊராட்சியை இரண்டாகப் பிரி்த்து, சேவூரை மையமாக வைத்து, தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழிற்பேட்டை, புரதான கோயில் புனரமைப்பு, குளம்,குட்டைகள் தூர்வாருதல் என ஏராளமான எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளது.

1957-ம் ஆண்டு நடந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் அவிநாசியைச் சேர்ந்த மாரப்பகவுண்டர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 1962-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே வென்றார். 1977-ம் ஆண்டு முதல், கடந்த 39 ஆண்டுகளாக தனி தொகுதியாக இருந்து வருகிறது. தொகுதியில், அதிமுக 6 முறை வென்றுள்ளது. 1972-ம் ஆண்டு, விவசாய சங்கங்கள் சார்பில் பொதுவேட்பாளராக அறிமுகமாகி, வெற்றிபெற்ற முதல் சுயேட்சை வேட்பாளர் பி.ஓ.பெரியசாமி. அவர் அவிநாசியில்தான் வென்றார். சிபிஐயும், திமுகவும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக, அதிமுக ஏ.ஏ.கருப்புசாமி உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ப.தனபால்

அதிமுக

2

இ.ஆனந்தன்

திமுக

3

மா.ஆறுமுகம்

இந்தி கம்யூ

4

செ. பெருமாள்

பாஜக

5.

கே.கே.மாரிமுத்து

பாமக

6.

பி.சுமதி

நாம் தமிழர்29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:ஆண்

1,23,382

பெண்

1,26,159

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,49,556தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

அவிநாசி வட்டம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1957

கே. மாரப்ப கவுண்டர்

காங்கிரஸ்

20716

1962

கே. மாரப்ப கவுண்டர்

காங்கிரஸ்

27009

1967

ஆர். கே. கவுண்டர்

சுதந்திரா

31927

1971

டி. ஓ. பெரியசாமி

சுயேச்சை

29356

1977

எஸ். என். பழனிசாமி

காங்கிரஸ்

22550

1980

எம். ஆறுமுகம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

33294

1984

பி. லட்சுமி

அதிமுக

58677

1989

ஆர். அண்ணாநம்பி

அதிமுக (ஜெ)

33964

1991

எம். சீனியம்மாள்

அதிமுக

69774

1996

ஜி. இளங்கோ

திமுக

66006

2001

எசு. மகாலிங்கம்

அதிமுக

59571

2006

ஆர். பிரேமா

அதிமுக

54562

2011

கருப்புசாமி

அதிமுக

103002

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1957

கருப்ப கவுண்டர்

சுயேச்சை

13670

1962

எம். பொன்னுசாமி

சுதந்திரா

12196

1967

கே. எம். கவுண்டர்

காங்கிரஸ்

26808

1971

கே. தங்கவேலு

திமுக

28637

1977

ஆர். அண்ணாநம்பி

அதிமுக

20803

1980

எஸ். என். பழனிசாமி

காங்கிரஸ்

23623

1984

எம். ஆறுமுகம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

24504

1989

சி. டி. தண்டபாணி

திமுக

31806

1991

எம். ஆறுமுகம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

23625

1996

எம். தியாகராசன்

அதிமுக

39549

2001

எம். மோகன் குமார்

சுயேச்சை

38559

2006

ஆறுமுகம்

இந்திய பொதுவுடமைக் கட்சி

50023

2011

ஏ.ஆர்.நடராஜன்

காங்கிரஸ்ி

61831

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பிரேமா.R

அதிமுக

54562

2

ஆறுமுகம்.M

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

50023

3

ஆனந்தராஜ்.M

தேமுதிக

14570

4

மோகன்ராஜ்.M

சுயேச்சை

11146

5

ராமசாமி.P

பகுஜன் சமாஜ் கட்சி

1535

6

நைனன்.K

சுயேச்சை

1021

7

ரவிராஜ்.M.R

சமாஜ்வாதி கட்சி

684

8

செல்லதுரை.P

சுயேச்சை

542

9

கணேசன்.A

சுயேச்சை

393

134476

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கருப்புசாமி.M.A

அதிமுக

103002

2

நடராஜன்.A.R

காங்கிரஸ்

41591

3

ரங்கசாமி.R

பாஜக

5405

4

ஜெயா.V

சுயேச்சை

2798

5

மூர்த்தி.R

சுயேச்சை

1858

154654

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x