Published : 05 Apr 2016 16:05 pm

Updated : 11 May 2016 13:13 pm

 

Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 11 May 2016 01:13 PM

170 - திருவிடைமருதூர் (தனி)

170

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதூர் தொகுதி. சென்னை - கும்பகோணம் சாலையின் நுழைவு வாயிலான கொள்ளிடம் ஆற்றின் பழமையான அணைக்கரை பாலம் இங்குதான் உள்ளது.

திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், திருப்பனந்தாள் ஒன்றியத்தின் 44 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, வேப்பத்தூர், திருப்பனந்தாள் ஆகிய 5 பேரூராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.


விவசாயம், பட்டு கைத்தறி நெசவு, குத்துவிளக்கு மற்றும் பாத்திரங்கள் தயாரித்தல் முக்கியத் தொழில்கள். புகழ்பெற்ற ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சில தனியார் கல்லூரிகள் உள்ளன.

சென்னை சாலையில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வுகாண பழமையான அணைக்கரை பாலத்துக்கு அருகிலேயே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும். திருபுவனம் கைத்தறி நெசவுக்கும், நாச்சியார்கோயில் குத்துவிளக்கு தொழிலுக்கும் ஊக்கமளிக்கத் திட்டங்கள் வேண்டும் என்பன தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தாலுகா தலைமையிடமான திருவிடைமருதூரில் பேருந்து நிலையம் இல்லை, அரசுக் கல்லூரிகள் இல்லை, அரசு மேல்நிலைப் பள்ளி இல்லை என்ற குறைகள் மக்களிடம் உள்ளன.

வன்னியர், தலித், கள்ளர் சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர்.

1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, 2011-ம் ஆண்டில் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இதுவரை நடைபெற்ற 9 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 5 முறை திமுக, 2 முறை அதிமுக, 2 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் அதிமுகவின் ஆர்.கே. பாரதிமோகனும், 2011 தேர்தலில் திமுகவின் கோவி. செழியனும் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

உ. சேட்டு

அதிமுக

2

கோ.வி. செழியன்

திமுக

3

சா. விவேகானந்தன்

விசிக

4

ஆர்.எஸ். மாதையன்

பாமக

5

ச. வாசுதேவன்

பாஜக

6

இரா. சுலோச்சனாதேவி

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருவிடைமருதூர் வட்டம்

கும்பகோணம் வட்டம் (பகுதி)

பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,17,874

பெண்

1,61,148

மூன்றாம் பாலினத்தவர்

3

மொத்த வாக்காளர்கள்

2,34,025

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

கோவி.செழியன்

திமுக

2006

R.K.பாரதிமோகன்

அதிமுக

55.04

2001

க.தவமணி

அதிமுக

53.78

1996

செ. இராமலிங்கம்

திமுக

44.9

1991

N.பன்னீர்செல்வம்

காங்கிரஸ்

64.25

1989

செ. இராமலிங்கம்

திமுக

29.5

1984

மு. இராஜாங்கம்

காங்கிரஸ்

67.4

1980

செ. இராமலிங்கம்

திமுக

59.79

1977

செ. இராமலிங்கம்

திமுக

34.41

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.K. பாரதிமோகன்

அ.தி.மு.க

63231

2

G. ஆலயமணி

பாமக

59463

3

G. சங்கர்

தே.மு.தி.க

5261

4

K. வசுதேவன்

சுயேச்சை

2014

5

H. அன்சர் அலி

சுயேச்சை

1127

6

S. இளங்கோ

எஸ்.பி

1059

7

B. சவுரிராஜன்

பாஜக

806

8

G.E. நந்தகோபால்

சுயேச்சை

425

9

M. கண்ணன்

பி.எஸ்.பி

420

10

S. புரட்சி வேந்தன்

சுயேச்சை

288

11

M. கணேஷ் பாபு

சுயேச்சை

229

12

B. ஜெயபால்

டி.என்.ஜே.சி

220

13

K. பழனிவேல்

சுயேச்சை

157

134700

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கோவி. செழியன்

தி.மு.க

77175

2

T. பாண்டியராஜன்

அ.தி.மு.க

76781

3

குழந்தை அரசன்

சுயேச்சை

1646

4

S. ரவிச்சந்திரன்

சுயேச்சை

1253

5

K. ராஜாவேலு

பி.எஸ்.பி

902

6

A. இளங்கோவன்

சுயேச்சை

819

7

J. ராஜசேகர்

ஐ.ஜே.கே

693

8

T. சுபாஷ் சந்திர போஸ்

சுயேச்சை

619

9

S. இளங்கோவன்

சி.பி.ஐ

333

10

V. இளையராஜா

சுயேச்சை

171

160392சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்திருவிடைமருதூர் தொகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

தவறவிடாதீர்

தேர்தல் 2016
copy

பொது copy

தேர்தல் 2016

More From this Author

x