Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

55 - ஓசூர்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராக திகழ்ந்த பெருமை கொண்டது ஓசூர் நகராகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணை ஓசூர் மத்திகிரியில் தான் அமைந்துள்ளது. ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம், பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வர் மலைக்கோயில் ஆகியவை உள்ளது.

ஓசூர் தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ளது. இங்கு ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும் முஸ்லிம் சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர். இதனை தவிர வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். இதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஓசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் வாக்குகள் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.

இந்த தொகுதியில் மலர், காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி மதிப்புள்ள ரோஜா, கொய்மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொகுதியில் நீண்ட கால பிரச்சனைகளுக்கு குறைவில்லை. மலர் ஏற்றுமதி மையம், யானைகள் சரணயாலயம், ஓசூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை விவசாயிகளும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குண்டு ஊசி முதல் விமானம் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் கொண்டு ஓசூர் தொகுதியில் 2 ஆயிரம் மேற்பட்ட சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை தவிர கிராமபுறச்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமபுறங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மகளிருக்கென தனியாக பேருந்தும், தங்கும் விடுதியும் ஏற்படுத்திட வேண்டும். குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதால், கூடுதல் போலீஸார் நியமிக்க வேண்டும். தொடர் விபத்துகள் நிகழும் தர்கா பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை, முன் வைக்கிறார்கள் மக்கள்.

1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் தேசிய கட்சிகளின் தாக்கம் அதிகம். இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.பாலகிருஷண்ரெட்டி

அதிமுக

2

கே.கோபிநாத்

காங்கிரஸ்

3

வி.சந்திரன்

தேமுதிக

4

பி.முனிராஜ்

பாமக

5

ஜி.பாலகிருஷ்ணன்

பாஜக

6

அலெக்ஸ்எஸ்தர்

நாம் தமிழர்தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஓசூர் வட்டம் (பகுதி) சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந்திரம், பேரிகை, அமுதகொண்டபள்ளி, முகல்பள்ளி, வத்திரப்பள்ளி, ஆலூர், பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, தின்னப்பள்ளி, பாகலூர், கொடியாளம், கொத்தபள்ளி, கூஸ்தானப்பள்ளி, சொக்கநாதபுரம், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்ன, லிங்காபுரம், பட்டவாரப்பள்ளி, மல்லசந்திரம், துமனப்பள்ளி, கொளதாசபுரம், நாரிகானபுரம், சீக்கனப்பள்ளி, குருபரப்பள்ளி, அத்வானப்பள்ளி, அலேநத்தம், சுடுகொண்டபள்ளி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம், அட்டூர், படதாபள்ளி, நஞ்சாபுரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், ஜீமங்களம், நல்லூர், பேகேப்பள்ளி, அனுமேபள்ளி, கோவிந்தாக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தாபுரம், விஸ்வநாதபுரம், எலுவபள்ளி, மாரசந்திரம், காலஸ்திரபுரம், சித்தனப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, காருபள்ளி, பெத்த முத்தாளி, முத்தாலி, அட்டூர், தாசேப்பள்ளி, ஆலூர், பெத்தகுல்லு, சின்னகுல்லு, கெலவரபள்ளி, புனுகன் தொட்டி, ஆவலப்பள்ளி, முக்காண்டபள்ளி, மொத்தம் அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாளிக பெட்ட அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானப்பள்ளி, கோபனப்பள்ளி, முகலூர் மற்றும் பஞ்சாட்சிபுரம் கிராமங்கள், ஓசூர் (நகராட்சி) மற்றும் மத்தகிரி (பேரூராட்சி29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,56,436

பெண்

1,45,884

மூன்றாம் பாலினத்தவர்

89

மொத்த வாக்காளர்கள்

3,02,409தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எம். முனி ரெட்டி

சுயேச்சை

17850

53.9

1957

கே. அப்பாவு பிள்ளை

சுயேச்சை

10305

39.6

1962

இராமசந்திர ரெட்டி

காங்கிரஸ்

25577

64.46

1967

பி. வெங்கடசாமி

சுதந்திரா

21530

52.69

1971

பி. வெங்கடசாமி

சுதந்திரா

28259

63.81

1977

என். இராமசந்திர ரெட்டி

காங்கிரஸ்

30818

58.12

1980

டி. வெங்கட ரெட்டி

காங்கிரஸ்

25855

49.8

1984

டி. வெங்கட ரெட்டி

காங்கிரஸ்

35293

48.37

1989

என். இராமசந்திர ரெட்டி

காங்கிரஸ்

37934

39.78

1991

கே. எ. மனோகரன்

காங்கிரஸ்

47346

47.64

1996

பி. வெங்கடசாமி

ஜனதா தளம்

41456

34.89

2001

கே. கோபிநாத்

காங்கிரஸ்

45865

35.24

2006

கே. கோபிநாத்

காங்கிரஸ்

90647

---

2011

கே. கோபிநாத்

காங்கிரஸ்

65034

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

கே. அப்பாவு பிள்ளை

காங்கிரசு

13863

41.86

1957

என். இராமசந்திர ரெட்டி

காங்கிரசு

9257

35.57

1962

கே. சாமன்னா

சுதந்திரா

14101

35.54

1967

கே. எ. பிள்ளை

காங்கிரசு

19329

47.31

1971

டி. வெங்கட ரெட்டி

சுயேச்சை

15063

34.01

1977

கே. எஸ். கோதண்டராமையா

ஜனதா கட்சி

13653

25.75

1980

கே. எஸ். கோதண்டராமையா

சுயேச்சை

21443

41.31

1984

ஈ. வெங்கடசாமி

ஜனதா கட்சி

15096

20.69

1989

பி. வெங்கடசாமி

ஜனதா கட்சி

35873

37.62

1991

பி. வெங்கடசாமி

ஜனதா தளம்

38600

38.84

1996

டி. வெங்கட ரெட்டி

தமிழ் மாநில காங்கிரசு

39719

33.43

2001

பி. வெங்கடசாமி

பாஜக

39376

30.25

2006

வி. சம்பனகிரி ராமய்யா

அதிமுக

78096

---

2011

ஜான்சன்

தேமுதிக

50882

---

2006 சட்டமன்ற தேர்தல்

55. ஓசூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. கோபிநாத்

ஐ.என்.சி

90647

2

V. சம்பன்கிராமய்யா

அ.தி.மு.க

78096

3

B. வெங்கடசாமி

பி.ஜே.பி

23514

4

V. சந்திரன்

தே.மு.தி.க

14401

5

C. ராமசாமி

சுயேச்சை

3375

6

M. சித்ராம்பலம்

பி.எஸ்.பி

2227

7

N. கிருஷ்ணாரெட்டி

டி.என்.ஜே.சி

1186

8

A. பாட்ஷா

சுயேச்சை

1092

9

K. கவுரப்பா

சுயேச்சை

868

215406

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

55. ஓசூர்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. கோபிநாத்

ஐ.என்.சி

65034

2

S. ஜான் திமோதி

தே.மு.தி.க

50882

3

S.A. சத்யா

சுயேச்சை

24639

4

பாலகிருஷ்ணன்

பி.ஜே.பி

19217

5

சித்ராம்பலம்

சுயேச்சை

6325

6

S. ராம்தேவன்

சுயேச்சை

2018

7

G.C. ராமசாமி

சுயேச்சை

1517

8

H. சனாவுல்லா ஷெரீப்

பி.எஸ்.பி

1430

9

V. மஞ்சுநாத்

சுயேச்சை

1044

172106

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x