Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM

117 - கவுண்டம்பாளையம்

கோவை மாவட்டத்தின் பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் என்ற நகரப் பகுதியை மையமாகக் கொண்டு, தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ல் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், தூடியலூர், காளப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களையும், புறநகர்ப் பகுதியில் முக்கியமான பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தையும் உள்ளடக்கியது. மேலும் சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளிலிருந்து சில சில பகுதிகளைக் கொண்டு கவுண்டம்பாளையம் தொகுதி உருவானது.

இங்கு விவசாயமே மிக முக்கிய வாழ்வதரமாகவும், அடுத்ததாக செங்கல் உற்பத்தி, குறுந்தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்துவருகின்றன. சர்வதேச விமான நிலையம், மருதமலை முருகன் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆகியை கவுண்டம்பாளையம் தொகுதியின் குறிப்பிடத்தகுந்த இடங்கள். இத்தொகுதியில் வேளாளக் கவுண்டர்கள், ஒக்கலிக கவுடர்கள் அதிகளவிலும், அதற்கு அடுத்தபடியாக அருந்ததிய, பழங்குடியின மக்களும் வாக்கு வங்கியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

இந்த தொகுதிகுட்பட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளால் ஏற்பட்டு வரும் சூழல் மாசுபாடு, மணல் கொள்ளை, வன விலங்குகள் ஊடுருவல் ஆகியவையும், பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது, மாநகராட்சியில் இணைந்த புதிய பகுதி என்பதால் வளர்ச்சிப் பணிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.

மேலும் நொய்யல் நதிக்கும், பவானியாற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும் கெளசிகா நதி இந்த தொகுதியில் தான் உள்ளது. இயற்கை நீராதாரமான இந்த நதி பல்வேறு காரணங்களால் முற்றிலுமாக அழிவைச் சந்தித்துள்ளது. இந்நதியை மீட்டெடுத்து, அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்பது இப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கை.

இதுதவிர இத்தொகுதியின் அங்கமான சர்வதேச விமானநிலைய விரிவாக்கம் கோவை மாவட்ட தொழில்முனைவோரின் நீண்டகாலக் கனவாக இருந்து வருகிறது. மோட்டார், பம்புசெட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் குறுந்தொழில் மையங்கள் இத்தொகுதியில் அதிகம் இருப்பதால். குறுந்தொழில் முனைவோர்களை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

கோவை வடமேற்குப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி மக்கள் இத்தொகுதியின் நிரந்தர வாக்காளர்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமையும் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருக்கு இருக்கிறது.

2011ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றவர் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வி.சி.ஆறுக்குட்டி

அதிமுக

2

ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக்கவுண்டர்

திமுக

3

வி.ராமமூர்த்தி

மார்க்ச

ஸ்ட்

4

ஏ.தங்கவேலு

பாமக

5

ஆர்.நந்தகுமார்

பாஜக

6.

பி.கவுசல்யா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர் வடக்கு தாலுகா (பகுதி)

வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள்,

பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி) மற்றும் கவுண்டம்பாளையம் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

2,05,445

பெண்

2,04,541

மூன்றாம் பாலினத்தவர்

46

மொத்த வாக்காளர்கள்

4,10,032

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஆறுகுட்டி.V.C

அதிமுக

137058

2

சுப்பிரமணியன்.T.P

திமுக

67798

3

நந்தகுமார்.R

பாஜக

6175

4

கணேசன்.D

சுயேச்சை

1749

5

வசந்தகுமார்.D

சுயேச்சை

1436

6

விஸ்வநாதன்.V

லோக் சட்ட கட்சி

1331

7

பார்த்திபன்.P

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

654

8

குமணன்.R

சுயேச்சை

584

216785

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x