Published : 08 Apr 2014 06:08 PM
Last Updated : 08 Apr 2014 06:08 PM

இது எம் மேடை: மதுவிலக்கு அவசியம்

வி. விவேகானந்தன் - தலைவர், தென்னிந்திய காந்தி கிராம நிர்மாண சேவா தளம்.

தென்காசி தொகுதியின் முக்கியப் பிரச்சினையாக மதுவால் நிகழும் தீமைகளைச் சொல்லலாம். மது, இளம் தலைமுறையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறது. டாஸ்மாக் மூலம் ஒருபக்கம் அரசுக்கு வருமானம் என்கின்றனர். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான மனித சக்தி அழிந்துவருவதைப் பற்றி அரசுகளுக்குக் கவலை இல்லை. இதனால், இந்தத் தேர்தலில் மதுவிலக்கு என்ற உறுதிமொழி தேவை. மதுவிலக்கு சாத்தியம் இல்லாமல், அரசு எவ்வளவுதான் நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அவற்றால் பலன் இல்லை.

தென்காசி தொகுதியில் விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் அதிகம். அவர்களது வருமானத்தில் பெரும்பகுதியை டாஸ்மாக் மதுபானக் கடைகள் விழுங்கிவிடுகின்றன. நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களில் பலரும் குடிக்கு அடிமையானதைப் பார்க்கும்போது நெஞ்சம் குமுறுகிறது. குற்றாலம் அருவிக்குக் குளிக்க வருகிறார்களா, குடிக்க வருகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் காணும் இடங்களிலெல்லாம் காலி மது பாட்டில்களால் நிரம்பி வழிகிறது. இதில் உடைந்த பாட்டில்கள் சுற்றுலாப் பயணிகளின் காலைப் பதம் பார்க்கின்றன. விலையில்லாப் பொருட்களை வழங்குவதாக உறுதி அளிக்கும் கட்சிகள், மதுவிலக்கு கொண்டுவருவோம் என்பதையும் உறுதிமொழியாக அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x