Published : 20 Apr 2014 01:21 PM
Last Updated : 20 Apr 2014 01:21 PM

ராமநாதபுரத்தில் நாளை ராகுல் பிரசாரம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை (ஏப். 21) பிரசாரம் செய்கிறார்.

இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ள ராமநாதபுரம் பாரதி நகர் டி பிளாக் பகுதியை மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, காங்கிரஸ் பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் பார்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

டெல்லியில் உள்ள சிறப்பு பாதுகாப்புக் குழு போலீஸ் கண்காணிப்பாளர் காலியார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி, பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் வருகிறார்.

ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பகல் 12.30 மணியளவில் அவர் உரையாற்றுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் தெலங்கானாவில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x