Published : 15 Apr 2014 10:10 AM
Last Updated : 15 Apr 2014 10:10 AM

திமுக-வை குறை கூற மோடிக்கு தகுதியில்லை: கனிமொழி

தமிழகத்தை குறைகூற மோடிக்கு தகுதியில்லை என்று சேலத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் உமாராணியை ஆதரித்து கனிமொழி பேசிய தாவது:

சேலம் மக்களின் குடிநீர் பிரச் சினையைப் போக்க திமுக ஆட்சி யில் ரூ.283 கோடியில் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்ற நிலையில் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. தமிழகத் தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் அம்மா உணவகத்துக்குப் போய்விடு கிறது.

இருண்ட தமிழகமாக மாறிவரும் நிலையில், ஜெயலலிதா மேடை தோறும் தமிழகம் மின்மிகை மாநில மாக விளங்குகிறது என்கிறார். மக்கள் இதனை நம்ப தயாராக இல்லை. பிரச்சார கூட்டங்களில் மோடி பேசும்போது, தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் வளர்ச்சி குன்றி யுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில்தான் தமிழகம் நன்கு வளர்ச்சி பெற்றது என்பது தான் உண்மை. தமிழகத்தில் எழுத் தறிவு, கல்வி அறிவு பெற்றவர்கள் 80 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளனர். ஆனால், குஜராத்தில் 75 சதவிகிதத்துக்கும் குறை வானர்வர்களே கல்வி அறிவு பெற்றவர்கள்.

சத்துணவு குறைபாட்டால் குஜராத்தில் 53 சதவிகிதம் பேர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் குஜராத் தைக் காட்டிலும் குறைவான சத விகிதமே உள்ளது. மனிதவளம், தொழில்துறை, கல்வி, பெண் களுக்கான சமத்துவம், பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களிலும் தமிழகம் முதன்மை மாநிலமாகவே விளங்குகிறது.

குஜராத்தில் பாதுகாப்பு இல்லை

குஜராத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சிறுபான்மையினருக்கும் அதே நிலைதான். கல்வி, மனிதவளம் உள்ளிட்டவற்றில் குஜராத் பின்தங்கியே உள்ளது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சி குன்றிவிட்டதாக குறை கூற மோடிக்குத் தகுதியே இல்லை. மதநல்லிணக்கம், மதசார்பற்ற ஆட்சி மத்தியில் அமைய வேண்டுமெனில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து 40 இடங்களிலும் வெற்றிபெற செய்யுங்கள் என்று அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x