Published : 25 Apr 2014 10:27 AM
Last Updated : 25 Apr 2014 10:27 AM
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் சென்னை தலை மைச் செயலகத்தில் வியாழக் கிழமை இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-
வாக்குச்சாவடிகளில் சரிவர இயங்காமல் இருந்த 129 மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் மாற்றப்பட்டன. அரக் கோணம் ஓரியூர், திண்டுக்கல் காரியாப்பட்டி, ஈரோடு மருதூர், கிருஷ்ணகிரி ஈக்கால்நத்தம், அரியலூர் கருவிடைசேரி ஆகிய 5 இடங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கப்படவில்லை என்றுகூறி வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
ஓட்டு போடுவதன் அவசி யத்தை வலியுறுத்தி சென்னையில் அதிக விழிப்புணர்வு செய்யப் பட்ட போதிலும் தென்சென்னை தொகுதியில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. இதற் கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்யப்படும்.
சென்னையில் தேர்தல் நாளன்று விடுமுறை விடாத ஐ.டி. நிறு வனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் எந்தெந்த நிறுவனங்கள் விடுமுறை விடவில்லையோ அந்த நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்படும். கடந்த 2 நாட்களில் ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.25.56 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு குறித்து தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்வார்கள். மறுவாக்குப்பதிவு அவசியம் என்றால் அவர்கள் கருதும் வாக்குச்சாவடிகளில் மறு வாக்கு நடத்தப்படலாம். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மிகவும் பயனுள்ள தாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை ஆணையர்களும் கருத்து தெரி வித்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட மையங்களில் பாதுகாக்கப்படும். அங்கு 24 மணிநேர வீடியோகாமிரா கண்காணிப்பு இருக்கும். முதல் அடுக்கில் மத்திய போலீசாரும் அதைத்தொடர்ந்து மாநில போலீசாரும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது பிற்பகல் தெரிய ஆரம்பித்துவிடும். மாலையில் தேர்தல் முடிவு தெரிந்துவிடும். இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT