Published : 21 Apr 2014 10:08 AM
Last Updated : 21 Apr 2014 10:08 AM
நாடெங்கும் மோடி அலை வீசுவ தாக இட்டு கட்டுகிறார்கள். உண்மை யில் நாட்டில் மோடி அலையும் இல்லை, தமிழ்நாட்டில் லேடி அலை யும் இல்லை; கருணாநிதி அலை தான் வீசுகிறது என்றார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவள வனை ஆதரித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் அன்பழகன் மேலும் பேசியது:
தற்போது தமிழகத்தில் மின் வெட்டு அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் சிறுதொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். திமுக ஆட்சியில் மின்கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் இவை உயரவில்லை. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இவை அனைத்துமே மும்மடங்கு உயர்ந்துள்ளது.
2004 வெற்றி போல இம்முறையும் வென்று, ஜெயலலிதாவுக்கு நல்ல பாடம் கற்பிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT