Published : 10 Apr 2014 01:30 PM
Last Updated : 10 Apr 2014 01:30 PM

வாக்காளர்கள் எண்ணிக்கை 5.5 கோடியைக் கடந்தது: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

தமிழகத்தில் 13.62 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 கோடியைக் கடந்துள்ளது. மேலும் தமிழகத்தில் முதல்முறையாக பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

சென்னை தலைமைச் செயல கத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

விழிப்புணர்வு சிடி

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், வாக்காளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் சி.டி.யை தற்போது தயாரித்து வெளியிட்டுள்ளோம். கடந்த தேர்தல்களின்போது, வாக்காளர் களுக்கு அரசியல் கட்சிகள் பணம் தருவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரம் அமைந்திருந்தது. இம்முறை பணம் வாங்குவது தவறு, என்று வாக்காளர்களை அறிவுறுத்தும் வகையில், “நேர்மையாக, மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றம் செய்துள்ளோம்.

13.62 லட்சம் பேர் அதிகரிப்பு

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. வாக்காளர் பட்டி யல் சுருக்கமுறை திருத்தத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்கள் இருந்தனர்.

அதன் பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்ட தால் ஜனவரி 10-க்குப் பிறகு 14 லட்சத்துக்கு அதிகமான மனுக்கள் வந்தன. அந்த மனுக்களின் பரிசீலனை முடிந்து, துணை வாக்காளர் பட்டியல் தற்போது இறுதிசெய்யப்பட்டுவிட்டது.

8 ஆயிரம் பெண்கள்

இதில் சுமார் 13 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.5 கோடியை கடந்துள்ளது.

மேலும், தேர்தல் வரலாற்றி லேயே தமிழகத்தில் முதல் முறை யாக பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது 5 கோடியே 51 லட்சத்து 15 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 13 ஆயிரத்து 333. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570. அதாவது ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 8,237 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இன்று முதல் “பூத் ஸ்லிப்”

புதிய வாக்காளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் புகைப் படத்துடன் கூடிய பூத் ஸ்லிப், அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் வாக்களிக் கலாம். பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத் தில் பூத் ஸ்லிப்களை பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x