Published : 25 Apr 2014 08:16 AM
Last Updated : 25 Apr 2014 08:16 AM
தமிழகத்தில் இளம் வாக்காளர் களின் எழுச்சியால் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களின் மனம் கவர்ந் தது கட்சி வாக்காளர்களா, ‘நோட்டா’வா என்று புரியாததால் அரசியல் கட்சிகள் கலக்கத்திலும் குழப்பத்திலும் உள்ளன.
வாக்குப்பதிவின்போது, அதிக அளவில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தால் அது ஆளுங் கட்சிக்கு எதிராக போடப்படும் வாக்குகள் என்று சொல்வது வழக்கம். அதில் உண்மை இல்லா மலும் இல்லை.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவின்போது இவ்வாறு நிகழ்ந்து அது அப்போதைய ஆளுங்கட்சி யான திமுகவுக்கு எதிராக அமைந்து, எதிர்க்கட்சியான அதிமுக அதிக இடங்களைப் பிடித்து தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் வியாழக்கிழமை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிலும் வாக் காளர்கள் திரண்டு வந்து வாக் களித்திருப்பது அதிலும் குறிப் பாக, இளம்வாக்காளர்கள் ஆர்வத் தோடு வந்து தங்கள் வாக்கைப் பதிவுசெய்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருவித எதிர் பார்ப்பையும், அதேநேரத்தில் சற்று கலக்கத்தையும் உண்டாக்கி யிருக்கிறது. காலை 9 மணி நில வரப்படி ஒட்டுமொத்த வாக்குப் பதிவு 14.31 சதவீதம், 11 மணிக்கு 35.28 சதவீதம், மதியம் 1 மணிக்கு 47.19 சதவீதம், பிற்பகல் 3 மணிக்கு 60.52 சதவீதம் என மளமள வென உயர்ந்தது.
இளைஞர்களை குறிவைத்துப் பிரச்சாரம்
முதல்முறை வாக்காளர்களாகிய இளம் வாக்காளர்களின் வாக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சமூக வலைதளங்கள், செல்போன் எஸ்எம்எஸ் பிரச் சாரங்களுக்கு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அளித்த முக்கியத்துவத்தில் இருந்தே அறிந்துகொள்ளலாம். அது மட்டுமின்றி, ஏறக்குறைய எல்லா கட்சி தலைவர்களுமே தங்கள் பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்களிடம் வேண்டுகோள் விடுக்க தவறவில்லை. இளம் வாக்காளர்களை கவரும் வண்ணம் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த முறை அதிக அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
வாக்குப்பதிவின் தீவிரத்தை யும், தேர்தலில் இளைஞர்களின் உற்சாக பங்கெடுப்பையும் பார்த் தால் குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட கூட்டணி ஒட்டு மொத்தமாக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும்போல் தெரிகிறது.
‘நோட்டா’ முதல் முறை
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக, ‘மேற்கண்ட எந்த வேட்பாளரும் இல்லை’ என்பதை தேர்வு செய்யும் ‘நோட்டா’ பட்டனும் இம்முறை வைக்கப்பட் டிருந்தது. அதற்கான ஆதரவு சதவீதமும் வெற்றி நிலவரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற் படுத்தும்.
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடக்கிறது. அது முடிந்த பிறகு, பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஒவ்வொன் றாக வெளிவரும். மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை சுவாரஸ்யத்துக்கு குறைவிருக் காது.
ஆர்வத்துக்கு காரணம் என்ன?
இளைஞர்கள் ஆர்வத்தோடு அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததற்கான காரணம் குறித்து சென்னை லயோலா கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கே.எஸ்.அந்தோணிசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போது அச்சு, மின்னணு ஊடகங்கள், பேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்கள், எஸ்எம்எஸ் போன்றவை மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தேர்தலில் நிலவும் போட்டிகள், தற்போதைய தலைவர்கள் மீது திருப்தி இல்லாமை, ஆட்சி மாற்றம் போன்ற காரணங்கள், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இளைஞர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கலாம். லஞ்சம் இல்லாத தூய நிர்வாகம், புதிய தலைவர்களின் ஆட்சி பற்றிய எதிர்பார்ப்பு, ஆம் ஆத்மி கட்சியின் வருகை போன்றவையும் தேர்தல் பக்கம் இளைஞர்களை ஈர்த்திருக்கும். மேலும் எஸ்எம்எஸ் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் அடிக்கடி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரங்களும் வாக்களிக்கும் ஆர்வத்தை அதிகரித்திருக்கக் கூடும். இவ்வாறு அந்தோணிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT