Published : 21 Apr 2014 02:02 PM
Last Updated : 21 Apr 2014 02:02 PM

வாக்காளர்களுக்கு பணம்: மதுரையில் அரசியல் கட்சிகள் நூதனம்

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியையும் மீறி தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பற்பல நூதன யுத்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக மதுரை பகுதியில், செல் போனில் வாக்காளர்களை அழைத்து அருகில் இருக்கும் டீ கடையிலோ, மளிகை கடையிலோ இருந்து ஓட்டுக்கு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்சிகள் கூறிவருகின்றன என புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படும் டீ கடைகள் அல்லது மளிகை கடைகள் உரிமையாளர்கள் உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு செல் போன் மூலம் வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணம் அளித்தால் அதனை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் கண்காணிப்பது மிகவும் சிரமம் என்பதால் இத்தகைய முறையை கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என பகுதிக்கு ஏற்றாற் போல் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் யுக்தியும் வித்தியாசப்படுகிறதாம்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாக்காளர்கள் பூத் சிலிப் வாங்க ஆவல் காட்டுவது அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற விரும்புகிறார்கள் என எடுத்துக்கொள்ளவதா இல்லை ஓட்டுக்கு பணம் வாங்குவதற்காக காட்டும் ஆர்வமா என தெரியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x