Published : 25 Apr 2014 08:46 AM
Last Updated : 25 Apr 2014 08:46 AM

தருமபுரியில் 81% வாக்குப்பதிவின் பின்னணி.. பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள்

தமிழகத்தில் தருமபுரி நாடாளு மன்ற தொகுதியில்தான் அதிக பட்சமாக தோராயமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரைக் கொண்ட தருமபுரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததன் பின்னணி யில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

காங்கிரஸ் மீதான வெறுப்பு, மோடி குறித்த எதிர்பார்ப்பு, புதிய வாக்காளர்கள், தருமபுரி மாவட்டத்தில் நடந்த கலவர சம்பவங்களின் தாக்கம், கட்சியி னரின் தீவிர பிரச்சார பணிகள், ஆளும் தரப்பு இறுதி நேரத்தில் வாக்காளர்களை கவனித்த விதம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் தருமபுரி தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதாக கருதப்படு கிறது.

மத்திய அரசு மீதான வெறுப்பு

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் தருமபுரி மாவட்ட மக்கள் பின்தங்கியிருந்தாலும், அரசியல் நடவடிக்கைகளை ஓரளவு உற்று கவனிப்பவர்களா கவே இருந்துள்ளனர்.

எனவே தங்கள் வெறுப்பை பதிவு செய்யும் வாய்ப்பாக வாக் காளர்கள் தேர்தலை நினைத்த தால் ஏற்பட்ட விளைவும் இங்கு வாக்குப்பதிவு அதிகரிக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.

மோடி மீதான எதிர்பார்ப்பு

ஊடக விளம்பரங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பங்கு, கூட்டணி கட்சியினர் தொகுதி முழுக்க மோடி மற்றும் குஜராத் மாநிலம் குறித்து பிரச்சாரத்தில் முன்வைத்த தகவல்கள் ஆகிய வையும் மோடி மீது வாக்காளர் களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் புதிய வாக்காளர்கள் இடையேயும் மத்தியில் ஆட்சிமாற்றம் குறித்த சிந்தனைகள் வலுவாக இடம் பெற்றிருந்ததும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

கலவர சம்பவங்களின் தாக்கம்

தருமபுரியில் கடந்த 2012-ம் ஆண்டு காதல் கலப்பு திருமண விவகாரத்தில் 3 கிராமங்கள் கொளுத்தப்பட்டன.

இது இரு பெரும் சமூகத்தினரி டமும் பரஸ்பரம் நீருபூத்த நெருப் பாக வெறுப்புணர்வை ஏற் படுத்தி வைத்திருந்தது. வெளிப்படையாக தெரியா விட்டாலும், இரு சமூகத்தினரும் இப்பிரச்சினையை சவாலாக எடுத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டன.

தேர்தலுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னதாக கட்சிகள் மூலம் தொகுதியின் 70 சதவீத வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

தருமபுரியைச் சேர்ந்த கல்வி யாளர் ஹரிகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தருமபுரி மாவட்டம் கல்வியில் தமிழக அளவில் 32வது இடத்தில் இருந்தது.

தொழில்வாய்ப்பு, பொருளா தார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்த ஏக்கம் தொகுதி மக்களிடம் பெரிய அளவில் இருந்தது. அந்த முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் தாக்கம்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x