Published : 03 May 2014 09:14 AM
Last Updated : 03 May 2014 09:14 AM

பேட்டியில் மோடி சொன்னது முழுப் பொய்: சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர்பாக தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ காரணம் தூர்தர்ஷனுக்கு மோடி கொடுத்த பேட்டியில் வெளியான விவரங்கள்தான்.

‘அகமது பட்டேல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண்பர்களில் ஒருவர். இப்போது அவர் மாறி இருக்கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப்பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவருடன் சேர்ந்து உணவு அருந்தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப்பட்ட தோழமை உறவு தொடர வேண்டும் என அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தார்.

அகமதுபாய் என எப்போதும் அவரை அழைத்ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகிறோம். பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்பதற்கான காரணம் பற்றி கேட்டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக படேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல்லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வருகிறது. எனது வீட்டுக்கு அவரும் அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப்பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

80களில் அவர் பாஜக பொதுச் செயலராக இருந்தபோது அவர் எனது வீட்டுக்கு வந்தது நினைவிருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித்தோம்.

முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் போனில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை காரணமாக எடுத்துப் பேசியது உண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ளவருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டி யில் அரசியல் இருக்கிறது. தேர் தல் ஆதாயத்தை கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என்றார் அகமது பட்டேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x