Published : 13 Apr 2014 03:30 PM
Last Updated : 13 Apr 2014 03:30 PM
அமேதி உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி யில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இத்தொகுதியில் அவர் ஏற்கெனவே இருமுறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
அமேதி தேர்தல் அலுவலரிடம் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், “எங்க ளின் குடும்பத்திற்கும் அமேதி தொகுதி மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த முறையும் வெற்றி பெறுவேன். அமேதி தொகுதியை மேம்படுத்த பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டேன். இப்பகுதியை தேசிய நெடுஞ்சாலையுடன இணைக்கும் வகையில் சாலை வசதியை மேம்படுத்தினேன். ரயில் சேவையையும் ஏற்படுத்தியுள் ளேன். இப்போது இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்து வருகி றேன்” என்றார். அமேதி தொகுதியில் மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இத்தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டி.வி. நடிகை ஸ்மிருதி இரானி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஸ்வாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சொத்து ரூ.9.4 கோடி
ராகுல்காந்தி, தனது சொத்து மதிப்பு ரூ.9.4 கோடி என குறிப்பிட்டுள்ளார். இது 2009-ம் ஆண்டு ரூ.4.7 கோடியாக இருந்தது.
இப்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தனது அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.8.2 கோடி என்று ராகுல் தெரிவித்துள்ளார். இது 2009ம் ஆண்டு ரூ.4.4 கோடியாக இருந் தது. தனது சொத்துகளில் கணிசமானவற்றை கடந்த 5 ஆண்டுகளில் ராகுல் விற்பனை செய்துள்ளார்.
அசையா சொத்து களை விற்ற போதிலும், அவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு உயர்ந்துள் ளதற்கு, அவற்றின் சந்தை மதிப்பு அதிகரித்ததே காரணம். 2012-2013 நிதியாண்டில் தனது மொத்த வருமானம் ரூ.92.46 லட்சம் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். தனக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்று ராகுல் கூறியுள்ளார். அவருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அரசு காரில்தான் பயணம் செய்கிறார்.
கைச்செலவுக்காக ரூ. 35 ஆயிரம், வங்கியில் வைப்புத் தொகை ரூ.9.50 லட்சம், கடன் பத்திரங் கள், பங்குகளில் ரூ.1.90 லட்சம், பரஸ்பர நிதியில் ரூ.81.28 லட்சம், அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட பிற முதலீடுகள் ரூ. 20.70 லட்சம், ரூ. 2.87 லட்சம் மதிப்பிலான தங்க நகை உள்ளிட்டவற்றை தனது அசையும் சொத்துகளாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT