Published : 27 Apr 2014 11:04 AM
Last Updated : 27 Apr 2014 11:04 AM

3-வது அணிக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கலாம்: சல்மான் குர்ஷித் யோசனை

மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கலாம், தேவைப்பட்டால் 3-வது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் யோசனை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. மே 12-ல் இறுதிக் கட்டத் தேர்தலும் மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 3-வது அணியில் இடம்பெற்றுள்ள மாநிலக் கட்சிகளும் அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தலுக்குப் பிறகு 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் குர்ஷித் பேசியதாவது:

பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம். தேவைப்பட்டால் 3-வது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x