Published : 20 Apr 2014 04:10 PM
Last Updated : 20 Apr 2014 04:10 PM
நாட்டில் நிலவும் காங்கிரஸ் எதிர்ப்பு அலையால், மூன்றாவது அணிக்கே சாதகம் ஏற்படுமே தவிர, பாஜகவுக்கு அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுக்மிந்தர் சிங் செகோனுக்கு வாக்கு சேகரிக்க, பிரகாஷ் காரத் இன்று லூதியானா வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு அலை நிலவுகிறது. இதனால், பலனடையப்போவது மூன்றாவது அணிதானே தவிர, பாஜகவுக்கு சாதகம் ஏற்படாது. இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது சாத்தியமே இல்லை" என்றார்.
மூன்றாவது அணி ஆட்சியமைக்க, காங்கிரஸிடம் ஆதரவு கோரப்படுமா என்றதற்கு, "மதவாத சக்திகளை ஆதரிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய 'ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகம் பற்றி கேட்டதற்கு, அதில் இட்மபெற்ற இடதுசாரிகள் குறித்த விஷயங்களை துளியும் ஏற்க முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT