Published : 13 Apr 2014 03:11 PM
Last Updated : 13 Apr 2014 03:11 PM

என்னை சிறையில் தள்ள முயற்சி: நரேந்திர மோடி குற்றச்சாட்டு

சிபிஐ மூலம் என்னை சிறையில் தள்ள கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகள் வரவேற்கப்படுகின்றனர். அவர்களுக்காக சட்டங்கள் உடைக்கப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் மட்டும் தொடர்ந்து புறக் கணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவை நேசிப்பவர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தோடு இந்தியாவுக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது.

அவர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இது போன்ற வாக்குவங்கி அரசியலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் அகதிகள் அனைவருக் கும் இந்திய குடியுரிமை வழங்கப் படும். அவர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப் படும் என்று உறுதியளிக்கிறேன்.

நதிகள் இணைக்கப்படும்

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முன்னாள் பிரத மரின் வாஜ்பாயின் கனவுத் திட்ட மான நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வறட்சிப் பகுதி களுக்கு தண்ணீர் திருப்பிவிடப் படும்.

குஜராத் மாநிலம், கட்ச் பிராந்தி யத்தின் வறட் சிப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம். நர்மதை நதி நீரை அந்தப் பகுதிக்கு விநியோகம் செய்ததன் மூலம் அங்கு மாம்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானின் வறட்சிப் பகுதியான பார்மரிலும் அதுபோன்ற வேளாண் புரட்சி ஏற்படுத்தப்படும்.

பாகிஸ்தான் எல்லைகளில் பெட்ரோல், இயற்கை எரி வாயுவை தேடும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. அதே பிராந் தியத்தில் நமது எல்லைப் பகுதி களிலும் பெட்ரோல், இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. நாம் ஏன் இதுவரை அதுபோன்ற முயற்சி யைத் தொடங்கவில்லை?

என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் கடுமையாக உழைத்து வருகிறது. அதற்காக சிபிஐ அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். சோனியா காந்தியும் அவரது ஏஜெண்டுகளும் என்னை அழிக்க கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர்களால் என்னை குற்றம்சாட்ட முடியவில்லை. நான் அப்பழுக்கில்லாதவன் என்று நரேந்திர மோடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாஜக அதிருப்தி தலைவர் ஜஸ்வந்த் சிங் அங்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டி யிடுகிறார். எனவே அந்தத் தொகுதி யில் பாஜக அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x