Published : 14 Apr 2014 11:00 AM
Last Updated : 14 Apr 2014 11:00 AM
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவகவுடா ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் கடந்த சனிக்கிழமை பேசுகையில், “மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு 272 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும். அவ்வளவு இடங்களில் பாஜக வெற்றி பெறாது. ஒருவேளை அக்கட்சி வெற்றி பெற்றால், நான் அரசியல் துறவறம் மேற்கொள்வேன். கர்நாடக மாநிலத்தை விட்டு வெளியேறி விடுவேன்” என்றார்.
அதற்கு பதிலடி தரும் வகையில் சிக்பல்லபூரில் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
“முன்னாள் பிரதமரான உங்களுக்கு (தேவகவுடா) நான் மகனைப் போன்றவன். உங்களுக்கு இங்கு (கர்நாடகம்) இருப்பது சிரமமாக இருந்தால், குஜராத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு நீங்கள் முதியோர் இல்லத்திலோ, தனி வீட்டிலோ, பண்ணை வீட்டிலோ அல்லது எனது வீட்டிலோ தங்கலாம். உங்களின் மகனை விட சிறப்பாக கவனித்துக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT