Published : 24 Apr 2014 12:15 PM
Last Updated : 24 Apr 2014 12:15 PM
பிரதமர் மன் மோகன் சிங் இன்று காலை அசாமில் உள்ள குவஹாத்தியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அசாமில் 6 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மக்கள் இன்று காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன்சிங், அவரது மக்களவை தொகுதியான குவஹாத்தியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் அங்கு 17 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் அசாமில் உள்ள 14 தொகுதிகளில் 8 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முன்னதாக இரண்டு கட்டமாக நடந்தது. இதில் 78% சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT