Published : 01 May 2014 02:28 PM
Last Updated : 01 May 2014 02:28 PM

மோடி ஒருபோதும் பிரதமராக முடியாது: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்

நரேந்திர மோடி பிரதமராக முடி யாது என்பதை 100 சதவீதம் உறுதி யாகச் சொல்கிறேன். அவர்தான் பிரதமர் என்பது வெறும் வியாபார தந்திரம் என உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தில் எதுவும் செய்யமுடியாது என்பதை பாஜகவும், மோடியும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவே, ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக் கிறார்கள். ஆனால், வார ணாசியைத் தாண்டி அவர்களால் எதையும் பெற முடியாது. வாரணாசிக்கு அருகிலுள்ள காஸிபூர், மிர்ஸாபுர், சந்தௌலி, ஆஸம்கர் உள்ளிட்ட எங்கள் தொகுதிகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்வோம்.

வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடுவது என் அரசையோ, சமாஜ்வாடி கட்சியையோ, வாக்காளர் களையோ எவ்விதத்திலும் பாதிக் காது. இதுபோன்ற மனிதர்களை உத்தரப்பிரதேசம் பலமுறை சந்தித்திருக்கிறது. எம் மக்களுக்கு யார் வெறும் வாய்ச்சொல்வீரர்கள், யார் செயல்வீரர்கள் என்பது தெரியும்.

முஸாபர்நகர் வன்முறையி லிருந்து ஆதாயம் பெற பாஜக முயற்சித்துத் தோல்வியடைந்து விட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரை முஸாபர்நகர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது பேசுவதில்லை. மோடியும் அதுபற்றி இப்போது பேசுவதில்லை.

100% உறுதி

எல்லாவிதமான வியாபார தந்திரங்களைப் பயன்படுத்திய போதும், மோடியால் பிரதமராக முடியாது. இதை நான் 100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறேன். பிஹார், ஒடிசா மற்றும் தென்மாநிலங்களில் பாஜகாவால் வெற்றி பெற இயலாது.

பிறகு எப்படி மத்திய ஆட்சியில் அக்கட்சி அமரும் என நம்பிக்கையுடன் கூற முடியும்?

மகராஷ்டிரத்தில், பாஜக நவநிர்மாண் சேனையுடன் கைகோர்க்கும் விருப்பத்துடன் உள்ளது. நவநிர்மாண் சேனை வட இந்தியர்களுக்கு விரோதமானது. உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹார் மக்களுக்கு நவநிர்மாண் சேனை எதிராக உள்ளது. பிறகு, இம்மாநில மக்கள் பாஜகவுக்கு எந்த அடிப்படையில் வாக்களிப் பார்கள்?

ஆட்சியில் 3-வது அணி

மூன்றாவது அணிதான் மத்தியில் ஆட்சியமைக்கும். அதில், சமாஜ்வாதி முக்கியப் பங்கு வகிக்கும். உத்தரப்பிரதேசத் திலுள்ள 80 மக்களவைத் தொகுதி களில் சமாஜ்வாதி பெரும் பான்மையைக் கைப்பற்றும். மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெரும் தலைவராக முலாயம்சிங் யாதவ் உருவெடுப்பார்.

மூன்றாவது அணியிலுள்ள அனைத்துத் தலைவர்களும், யார் 3-வது அணியை வழிநடத்துவது என்பதை முடிவு செய்வர். அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சிக்கு வாய்ப்பு அதிகம். அவ்வகையில் சமாஜ்வாதி அவ்வாய்ப்பைப் பெறும்.

குஜராத்தில் ஒன்றுமில்லை

நான் குஜராத் சென்றிருந்த போது, இலவச பாசன நீர்த்திட்டம், இலவச லேப்டாப், வேலையின்மையைக் குறைத்தல் உள்ளிட்ட எத்திட்டங்களும் அங்கு இல்லை. அங்கு நீர்த்தட்டுப்பாடு உள்ளது. இவ்வாறு அகிலேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x