Published : 28 Apr 2014 09:54 AM
Last Updated : 28 Apr 2014 09:54 AM

யதார்த்தத்தை காங்கிரஸால் தாங்க முடியவில்லை: பாஜக

இரட்டை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்ற யதார்த்தத்தை காங்கிரஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதாவது:

கடந்த 12 ஆண்டுகளாக நரேந்திர மோடி பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி சிக்க வைக்க முயன்ற காங்கிரஸார், குற்ற உணர்ச்சியால் உளவியல்ரீதியாக அச்சப்படும் மனநிலைக்கு ஆளாகி யுள்ளனர்.

அதுதான், சோனியா குடும்பத் தினர் மோடி பற்றி பொருந்தாத வாதங்களைக் கூறி வருவதற்குக் காரணம். மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது, தங்களின் தோல்வியை காங் கிரஸ் ஒப்புக் கொண்டதையே வெளிப்படுத்துகிறது.

காங்கிரஸ் இரட்டை இலக்க கட்சியாகச் சரிந்து விட்ட யதார்த் தத்தை சோனியா குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், மோடி மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அக்கட்சி யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, எதிர்காலத்துக்காகத் திட்டமிட வேண்டும். தாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என காங்கிரஸார் நினைத்துக் கொண்டுள்ளனர். மோடி மட்டுமல்ல வேறு கட்சியோ, நபரோ ஆட்சியதிகாரத்தில் அமர்வதை அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

ஸ்திரத்தன்மையை சீர்குலைப் பதில் வர்த்தகர்களான காங்கிரஸை மக்கள் தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x