Published : 20 Apr 2014 06:46 PM
Last Updated : 20 Apr 2014 06:46 PM
மக்களவைத் தேர்தலில் மிகவும் கவனிக்கத்தக்க தொகுதியாகிவிட்ட வாரணாசியில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து, பிஹாரின் பின்லேடன் என்று அழைக்கப்படும் மீரஜ் காலித் நூர் போட்டியிடுகிறார்.
மறைந்த அல் காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனைப் போன்ற தோற்றம் கொண்ட மீரஜ் காலித் நூர் பிஹார் மாநிலத்தில் மிகவும் பிரபலம்.
பாட்னாவைச் சேர்ந்த இவர், சிறு வணிகம் செய்து அரசியலுக்கு வந்தவர். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாக பின்லேடன் போல் உடை அணிந்து நீண்ட தாடியுடன் பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தற்போது, சமூக நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு 'ராம் இந்தியா' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
வாரணாசியில் போட்டியிடும் முடிவை அறிவித்த மீரஜ் காலித் நூர், "இந்தத் தேர்தலில் எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமல்ல. மாறாக, இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழும் புனிதத் தலமான வாரணாசியில் மதசக்திகள் வேரூன்றுவதை தடுப்பதே முக்கிய நோக்கம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT