Published : 12 Apr 2014 11:10 AM
Last Updated : 12 Apr 2014 11:10 AM
மக்களவைத் தேர்தலில் அதிக அளவு மக்கள் வாக்களிப்பது எனக்கு பொறுப்பு அதிகரித்து வருகிறது என்பதை உணர்த்துகிறது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும் 11 தொகுதிகளில் ஏப்ரல் 17-ம் தேதி தேர்தல் நடைபெற வுள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் பலாசூரில் நேற்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசினார். அவர் கூறியது:
ஒடிசாவில் முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்க பெருமள விலான மக்கள் வாக்குச்சாவடி களில் ஆர்வத்துடன் வந்திருந் தனர். இது எனக்கு பொறுப்பு அதிகரித்து வருவதையே காட்டு கிறது.
வாக்களித்த மக்கள் அனை வருக்கும் எனது வாழ்த்து களை தெரிவித்துக் கொள் கிறேன். மத்திய ஆட்சியாளர் களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென்று பொது மக்கள் தீர்மானித்து விட்டார் கள். காங்கிரஸ் படுதோல்வி யடைப்போவது உறுதி.
பொதுமக்களாகிய நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை யைக் காப்பாற்று வேன். என் மீது காட்டும் அன்பை வட்டியுடன் திரும்பத் தருவேன். சோமநாத கடவுள் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான். எனவே ஜெகந் நாதர் பிறந்த மண்ணான ஒடிசா மக்கள் மீது எனக்கு மிகுந்த நெருக்கம் உண்டு என்றார்.
ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை தாக்கிப் பேசிய மோடி, ஒடிசா மாநில மொழியை சரியாக பேச முடியாத, சரியாக எழுதவும், படிக்கவும் தெரியாத அவரை எப்படி 15 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் மொழியை புரிந்து கொள்ள முடியாக அந்த நபர், உங்கள் துயரங்களையும், வேதனைகளையும் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்; அவரால் எப்படி நல்ல நிர் வாகத்தை அளிக்க முடியும்?
உங்கள் முதல்வர் உங் களை ஒருமுறையாவது சந்தித்த துண்டா, அப்படி ஒரு நபர் உங் களுக்குத் தேவையா என்று மோடி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்துப் பேசிய அவர், சோனியா அம்மையார் மத்தி யில் 10 ஆண்டுகள் ஆட்சி யில் இருக்க ஆதரவு அளித்துள் ளீர்கள். மாநிலத்தில் ஒரு வருக்கு 15 ஆண்டுகளாக வாய்ப்பளித் துள்ளீர்கள். எனக்கு 60 மாதங்கள் மட்டும் வாய்ப்பு தாருங்கள். ஒடிசாவை குஜராத் போன்று வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றிக் காட்டுகிறேன்.
ஒடிசா மாநில அளவிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற் றுள்ளன. ஆனால் மத்திய அரசின் மிகப்பெரும் ஊழல்களுக்கு முன்பு அவை பெரிதாகப் பேசப் படவில்லை என்பதே உண்மை, என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT