Published : 21 Apr 2014 10:48 AM
Last Updated : 21 Apr 2014 10:48 AM
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதிதாக அமையவுள்ள மத்திய அரசின் பிரதமராக நரேந்திர மோடிதான் இருப்பார் என பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக விமானத்தில் சென்றபோது, இது தொடர்பாக ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சியமைக் கத் தேவையான பெரும் பான்மை கிடைக்காவிட்டால், வேறு தலைவர்கள் பிரதமராக முன்னிறுத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்தச் சூழலிலும் தே.ஜ. கூட்டணியின் பிரதமர் நரேந்திர மோடிதான்.
தேசம் வெறும் சட்டங்களால் மட்டும் ஆளப்படுவதில்லை. தார்மீக அங்கீகாரம் பெற்ற ஒரு தலைவரால் ஆளப்படுகிறது. யார் பிரதமர் அல்லது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகி றார்களோ, அவர்களே அதற்கான தார்மீக உரிமை பெற்றவர்களாவர்.
முஸ்லிம்களிடையே இருக்கும் அச்ச உணர்வை நாங்கள் மெது வாக அகற்றி வருகிறோம். பேச்சு வார்த்தை மூலம் அவர்களின் பயம் முற்றிலும் அகற்றப்படும். மோடி, முஸ்லிம் தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். முஸ்லிம்கள் இப்போது மோடியை ஆதரிக்கின்றனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மிகப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களின் தனிநபர் வருமானம் பிறமாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம்களை விட அதிகம். முஸ்லிம்கள் தொடர்ந்து மோடி யையும், பாஜகவையும் நெருங்கு வர். பயம் எனும் பிம்பத்துக்கு முடிவு கட்டப்படும்.
2002 குஜராத் கலவரத்தின் போது, மோடி தவறு ஏதும் செய்ய வில்லை. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசிய மில்லை. பெரும்பாலான கலவரங் கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தன. அதற்காக அவர்கள் மன்னிப்புக் கோரினார் களா?
2002 குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக்குழு தீர்ப்ப ளித்து விட்ட பின்னரும், ஏராள மான அரசியல் ரீதியான தாக்குதல் களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை யும் மோடி எதிர்கொண்டு விட்டார். ஆனால், அவை குஜராத் தின் வளர்ச்சிக்காக அவர் பாடுபடுவதிலிருந்து பின்வாங்க வைக்கவில்லை. நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற் றிலிருந்து கவனத்தை திசை திருப்பவே குஜராத் கலவரத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள் கிறது. காங்கிரஸ் பிரச்சினைக ளிலிருந்து ஓடி ஒளிகிறது.
தனி நபரை விட கட்சியே முக்கியம், பெரிது என்ற சித்தாந்தத்திலிருந்து பாஜக விலகிவிடவில்லை. பிரதமர் அல்லது முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டவரை அதிக பட்சம் முன்னிறுத்துவது என்பது பாஜக கடைப்பிடிக்கும் மரபுகளுள் ஒன்று. ஆகவேதான் மோடியை அதிகமாக முன்னிறுத்துகிறோம். வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோருக்கும் அப்படித்தானே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றார் ராஜ்நாத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT