Published : 12 Apr 2014 05:55 PM
Last Updated : 12 Apr 2014 05:55 PM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சொந்த வாழ்க் கையைத் தாக்கிப் பேசவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
நரேந்திர மோடியின் திருமணம் தொடர்பாக சமீபத்தில் ராகுல் தெரிவித்த கருத்து, தனி நபரின் சொந்த விஷயங்களில் தலையிடும் வகையில் அவர் பேசுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலளித்தே ராகுல் இவ்வாறு கூறினார்.
அமேதி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு, செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: நான் மோடியின் சொந்த வாழ்க்கையை குறிப் பிட்டு பேசவில்லை. முந்தைய தேர்தல்களில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் திரு மணம் குறித்த விவரத்தை தெரி விக்காதது குறித்தே பேசினேன்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறானவை. இதே போன்றுதான் 2004, 2009-ம் ஆண்டுகளில் நடை பெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடையும் என கருத்துக் கூறப்பட்டது. ஆனால், அத்தேர்தல் களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலான கருத்து களைக் கூறும் போக்கு காணப் படுகிறது. காங்கிரஸை பொறுத்த வரை அனைவரையும் அரவணைத் துச் செல்வதையே கொள்கையாக வைத்துள்ளோம்” என்றார்.
பிரியங்கா காந்தி கூறுகையில், “தனிப்பட்ட ஒருவரின் வாழக் கையை விமர்சித்து ராகுல் பேசவில்லை. முந்தைய வேட்பு மனுக்களில் இல்லாத விவரம் குறித்துத்தான் அவர் கேள்வி கேட்டார். தனிநபரை தாக்கிப் பேசுவது பற்றி விமர்சிக்க அவர் களுக்கு (பாஜக) தகுதியில்லை” என்றார். ராகுலுக்கு எதிராக டி.வி. நடிகை ஸ்மிருதி இரானியை பாஜக நிறுத்தி இருப்பது குறித்து பிரியங்கா காந்தியிடம் கேட்டபோது, “அமேதியில் போட்டியிட யார் விரும்பினாலும் அதை வரவேற்போம். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அனைவருக்குமே உள் ளது” என்றார் பிரியங்கா காந்தி.
ராகுலுக்கு உற்சாக வரவேற்பு
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி நூற்றுக் கணக்கான தொண்டர்களுடன் சுல்தான்பூரின் அம்ஹார்ட் பகுதி யிலிருந்து அமேதியின் கவுரிகஞ்ச் வரை ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார். 42 கி.மீ. தூரம் பயணம் செய்த ராகுலுக்கு சாலையின் இரு ஓரங்களிலும் நின்று தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுலை வாழ்த்தி கோஷமிட்டனர்.
மேனகா சஞ்சய் காந்தி தம்பதியின் மகன் வருண் காந்தி, பாஜக சார்பில் போட்டியிடும் சுல்தான்பூரிலிருந்து ராகுல் காந்தி பேரணியை தொடங்கினார்.
இதற்கு முன்பு இதுபோன்று நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தொகுதிகளில் ராகுல்காந்தியும், அவரின் தாயார் சோனியா காந்தியும் தேர்தல் ஊர்வலம் சென்ற தில்லை. பெரும்பாலும் அதை தவிர்த்துவிடுவார்கள். இப்போது தான் முதல் முறையாக உறவின ரின் தொகுதியில் சோனியா குடும்பத்தினர் பிரச்சாரம் செய்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா கட்சியின் மூத்த தலைவர் கள் உடன் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT