தளி அருகே அரசுப் பள்ளி வகுப்பறை கட்டிட பணி தாமதம்: மலைக் கிராம மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

தளி அருகே பேளகரை மலைக் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம்.

தளி அருகே பேளகரை மலைக் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம்.

Updated on
2 min read

ஓசூர்: தளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தாமதமடைந்து வருவதாலும், சத்துணவு சமையல் அறையில் வகுப்பறை செயல்படுவதாலும், குழந்தைகள் வருகை குறைந்து, மலைக் கிராம மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது பேளகரை மலைக் கிராமம். தமிழக-கர்நாடக மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு 80 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில் கூலி வேலையே இவர்களின் பிரதானத் தொழிலாக உள்ளது.

தங்கள் கிராமத்திலிருந்து வேலை மற்றும் உயர் கல்விக்காக மலை அடிவாரத்தில் உள்ள கங்கதேவனப்பள்ளி செல்ல வேண்டும். இங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

<div class="paragraphs"><p>சத்துணவு சமையல் அறையில் வகுப்பறை செயல்படுவதால், பள்ளிக்குச் செல்லாத பேளகரை கிராம குழந்தைகள்.</p></div>

சத்துணவு சமையல் அறையில் வகுப்பறை செயல்படுவதால், பள்ளிக்குச் செல்லாத பேளகரை கிராம குழந்தைகள்.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், பள்ளி கட்டிடம் பழுதானதால், அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பணி தொடங்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை 30 சதவீதம் மட்டுமே பணி நிறைவடைந்துள்ளது. இதனால், பள்ளியின் சத்துணவு சமையல் அறையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

போதிய இடம் வசதி இல்லாதது மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி உள்ளனர். இதனால், குறைந்தளவே மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக அக்கிராம மக்கள் கூறியதாவது: அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் கிராமம் உள்ளதால், சாலை வசதி இல்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்படுவோரை இருசக்கர வாகனங்களில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து தளி, கும்ளாபுரம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.

மேலும், இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்களுக்கு ஒரே ஆசிரியை மட்டுமே உள்ளார். மேலும், பழுதான பள்ளிக் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி மெதுவாக நடந்து வருவதால், சத்துணவு சமையல் அறையில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலையுள்ளது.

இருக்கும் ஒரே ஆசிரியரும் பள்ளிக்குச் சரியாக வருவதில்லை. இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டோம். தற்போது 4 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்கின்றனர்.

உரிய அடிப்படை வசதிகள் இல்லாமை, அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மலைக் கிராமம் என்பதால் எங்கள் கிராமத்தில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

உயர் அதிகாரிகளும் எங்கள் கிராமத்தின் நிலை குறித்து ஆய்வு செய்வதில்லை. இதனால், எங்கள் குழந்தைகளும் கல்வி அறிவின்றி, கூலித் தொழிலுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி வகுப்பறை கட்டிட பணியை விரைந்து முடிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>தளி அருகே பேளகரை மலைக் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம். </p></div>
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in