Published : 14 Feb 2023 05:26 AM
Last Updated : 14 Feb 2023 05:26 AM

அங்கீகாரம் இல்லாத 695 பல்கலை.கள், 35 ஆயிரம் கல்லூரிகள்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து (யுஜிசி) பெறப்பட்ட தகவலின்படி, நாட்டில் உள்ள 1,113 பல்கலைக் கழங்களில் 418 மட்டுமே தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) அங்கீகாரம் பெற்றுள்ளன. இதுபோல 43,796 கல்லூரிகளில் 9,062 மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன. மீதமுள்ள 695 பல்கலைக்கழகங்கள், 34,734 கல்லூரிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களையும் என்ஏஏசி-யின் கீழ் கொண்டுவர அங்கீகார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுபாஷ் சர்க்கார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x