Last Updated : 10 Jun, 2023 03:30 AM

1  

Published : 10 Jun 2023 03:30 AM
Last Updated : 10 Jun 2023 03:30 AM

அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்: கோவை அரசு கலைக் கல்லூரியில் 50% இடங்கள்கூட நிரம்பவில்லை

கோவை: இரண்டு கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகும் கோவை அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இன்னும் 50 சதவீத இடங்கள்கூட நிரம்பாமல் உள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி, பிஏ பொருளாதாரம் உள்பட 23 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதில், நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மொத்தம் உள்ள 1,433 இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், 303 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,105 இடங்கள் காலியாக இருந்ததால், அந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 6-ம் தேதி தொடங்கிநேற்றுடன் (ஜூன் 9)நிறைவடைந்தது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது: இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் மொத்தமுள்ள இடங்களில், 945 இடங்கள் நிரம்பியுள்ளன. 488 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எனவே, அந்த இடங்களையும் நிரப்புவதற்காக வரும் 12, 13-ம் தேதிகளில் மீண்டும் கலந்தாய்வு நடைபெறும். இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் (ஷிப்ட்-2) ஆகிய பாடப்பிரிவுகளில் இதுவரை50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்), வணிகவியல் (சர்வதேச வணிகம்), வணிக நிர்வாவியல், பாதுகாப்பியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், அரசியல் அறிவியல், புவியியல், உளவியல், பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளில் இன்னும் குறைவான இடங்களே எஞ்சியுள்ளன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க காத்திருப்பது, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x