தண்ணீர் பிடிக்கும் தகராறில் இளைஞர் கொலை: தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரூபேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சூர்யா, உதயராஜா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரூபேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சூர்யா, உதயராஜா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா.

Updated on
1 min read

சென்னை: சென்னை நொளம்​பூர் யூனியன் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முரு​க​தாஸ்​(50). இவர் தனது மனைவி செல்​வி, மகன்கள் சஞ்​சய்​(25), சரத்​கு​மார்​(27) ஆகியோ​ருடன் வசித்து வரு​கிறார்.

நேற்று முன்​தினம் இரவு சரத் மற்​றும் சஞ்​சய் ஆகியோர் வீட்டினருகே லாரி​யில் தண்​ணீர் பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த அதே பகு​தி​யைச் சேர்ந்த உதயா என்​பவர் இவர்களுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதில் இரு​வரும் உதயாவை கையால் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

அதைத்​தொடர்ந்​து, சிறிது நேரம் கழித்​து, உதயா தனது சகோதரர்கள் கார்த்​திக், ராகேஷ் மற்​றும் சில நண்​பர்​களு​டன் சஞ்சய் மற்​றும் சரத் ஆகியோரின் வீட்​டுக்​குள் புகுந்து இருவரையும் கத்​தி​யால் தாக்​கி​யுள்​ளார். தடுக்க வந்த முருகதாஸை​யும் கத்​தி​யால் தாக்​கி​விட்டு தப்​பிச் சென்​றனர்.

இதில் காயமடைந்த 3 பேரும் கீழ்ப்​பாக்​கம் மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்பட்டபோது, செல்​லும் வழி​யிலேயே சஞ்​சய் உயி​ரிழந்​தார், சரத் மற்​றும் முரு​க​தாஸ் ஆகியோர் சிகிச்சை பெற்று வரு​கின்றனர்.

இந்த சம்​பவம் குறித்து முரு​க​தாஸின் மனைவி செல்​வி, நொளம்பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

நொளம்​பூர் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மை​யில் 3 தனிப்படைகள் அமைக்​கப்​பட்​டு, தீவிர தேடு​தல் பணி​யில் ஈடுபட்டனர். இந்​நிலை​யில் ​வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்றவாளியான ரூபேஷ் என்​பவரை பிடிக்​கும்​போது, அவர் காவலர்​களை தாக்​கி​விட்டு தப்ப முயற்​சித்​தார், இதனால் போலீஸார் தற்​காப்​புக்​காக ரூபேஷை கால் முட்​டி​யில் துப்பாக்கியால் சுட்​டுப் பிடித்​தனர்.

மேலும் இவ்​வழக்​கில் தொடர்​புடைய ஈஞ்​சம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த நவீன்​கு​மார்​(24), மதுர​வாயல் பகு​தி​யைச் சேர்ந்த உதய​ராஜ்(21), சூர்​யா(20), கார்த்​திக் ராஜா(28), ராகேஷ் ராஜா(26), மேஷாக்​(22), சூர்​யபிர​காஷ்(27) ஆகியோரை​யும் கைது செய்​தனர். இந்த கொலை சம்​பவம் தொடர்​பாக நொளம்​பூர் போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரூபேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சூர்யா, உதயராஜா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா. </p></div>
தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான அடித்தளம்: சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in