வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு

வழக்கு பதிந்த 29 நாளில் தீர்ப்பு
வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி: வளர்ப்பு மகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் இளைஞருக்கு சாகும்​வரை ஆயுள் தண்​டனை விதித்து திருநெல்​வேலி நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. வழக்கு பதிந்த 29 நாளில் இந்த தீர்ப்​பளிக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரியைச் சேர்ந்​தவர் அன்​சாரி (35). இவர், 11 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​டது குறித்​து, அச்​சிறுமி​யின் தாயார் நாங்​குநேரி மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போக்சோ சட்​டத்​தின்​கீழ் மார்ச் 12-ம் தேதி வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

நாங்​குநேரி மகளிர் ஆய்​வாளர் சுதா மற்​றும் போலீ​ஸார் வழக்கை விசா​ரித்து அன்​சா​ரியை கைது செய்​து விசாரணை நடத்தினர்.

இதன்தொடர்ச்சியாக குண்​டர் சட்​டத்​தில் கைது செய்யப்பட்டு அன்​சாரி சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். வழக்கு பதிவு செய்​யப்​பட்ட 5 நாட்​களில் வழக்​கின் அறிக்கை தயார் செய்​யப்​பட்​டு, நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கை திருநெல்​வேலி போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. நீதிபதி சுரேஷ்கு​மார் இவ்​வழக்கை விசா​ரித்​து, அன்​சா​ரிக்கு சாகும்​வரை ஆயுள் சிறை தண்​டனை​யும் ரூ.28 ஆயிரம் அபராத​மும் விதித்து நேற்று தீர்ப்பு கூறி​னார்.

மேலும் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டார். வழக்கு பதிவு செய்​யப்​பட்ட நாளி​லிருந்து 29 நாட்​களில் குற்​ற​வாளிக்கு நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது.

மாவட்​டத்​தில் இவ்​வாண்​டில் இது​வரை 7 போக்சோ வழக்​கு​களில் 7 குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ள​தாக, திருநெல்​வேலி எஸ்​பி வி.பிரசன்​னகு​மார்​ தெரி​வித்​துள்​ளார்​.

வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு
தமிழக தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in