தமிழக தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எண்​ணிக்​கைக்​கேற்ப நேற்று கூடு​தல் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தொகு​தி​வாரி​யாக பிரித்து அனுப்​பப்​பட்​டன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் 30-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொங்​கியது. ஏப்​.6-ம் தேதி​யுடன் வேட்​புமனு தாக்​கல் நிறைவடைந்​தது. 234 தொகு​தி​களில் மொத்​தம் 7,599 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

7-ம் தேதி வேட்​பு மனுக்​கள் பரிசீலனை நடை​பெற்​றது. இதில் 5,139 வேட்​புமனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. முறை​யாக பூர்த்தி செய்​யப்​ப​டாத 2,460 வேட்​புமனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன.

வேட்​புமனுக்​களை திரும்​பப்​ பெற கடந்த ஏப்​.9-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​பட்​டது. இதில் சுமார் 500-க்​கும் மேற்​பட்ட வேட்​புமனுக்​கள் திரும்பப்​பெறப்​பட்​டன. அன்றே வேட்​பாளர்​கள் எண்​ணிக்கை இறுதி செய்​யப்​பட்​டது. அதன்​படி, தமிழக தேர்​தல் களத்​தில் 4,023 வேட்பாளர்​கள் போட்​டி​யிடு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

இதில் அதி​கபட்​ச​மாக சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 தொகுதி​களில் 419 வேட்​பாளர்​கள், சேலம் மாவட்​டத்​தில் உள்ள 11 தொகு​தி​களில் 193 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

சென்​னை​யில் அதி​கபட்​ச​மாக பெரம்​பூர் தொகு​தி​யில் 47 வேட்​பாளர்​களும் குறைந்​த​பட்​ச​மாக சைதாப்​பேட்டையில் 15 பேரும் போட்​டி​யிடு​கின்​றனர்.

வேட்​பாளர் எண்​ணிக்கை உறு​தி​யானதைத் தொடர்ந்​து, கூடு​தலாக தேவைப்​படும் வாக்​குப் ப​திவு இயந்​திரங்​கள் அந்​தத்த மாவட்ட அளவில் நேற்​று, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் இணை​ய​வழி குலுக்​கல் மூலம் தொகுதிவாரி​யாக பிரிக்​கப்​பட்​டு, ஏற்​கெனவே வைக்​கப்​பட்​டுள்ள இயந்​திரங்​களோடு பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
9 வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்: பியூஷ் கோயல் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in