மானாமதுரையில் பள்ளி வளாகத்தில் நகைக்காக பெண் கொலை

மானாமதுரையில் பள்ளி வளாகத்தில் நகைக்காக பெண் கொலை
Updated on: 
1 min read

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் ஈஸ்வரன். அப்பகுதியில் உள்ள தனியார் கண் கண்ணாடி கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி மல்லிகா (56) சிஎஸ்ஐ பள்ளி விடுதி வார்டனாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

தற்போது வீட்டிலேயே கட்டுமானப் பணிகளுக்கு தேவையான தளவாடப் பொருட்களை வாடகைக்கு விட்டு வந்தார். இவர்களது 2 மகள்களும் வெளியூரில் உள்ளனர்.

நேற்று ஈஸ்வரன் கடைக்கு வேலைக்கு சென்ற நிலையில், மல்லிகா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். பிற்பகல் ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது, மல்லிகா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது 2 காதுகளும் அறுக்கப்பட்டு ஒரு பவுன் கம்மல்கள், கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

சம்பவ இடத்தில் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் மானாமதுரை போலீஸார் விசாரித்தனர். டிஎஸ்பி லோகநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மானாமதுரையில் பள்ளி வளாகத்தில் நகைக்காக பெண் கொலை
சேலத்தில் அமைச்சர் ஏற்றிவைத்த தேசிய கொடியை தலைகீழாக கட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் சஸ்பெண்ட்

X