கல்லூரி மாணவி பாலியல் புகாரில் குமரி மாவட்ட தவெக நிர்வாகி கைது

கல்லூரி மாணவி பாலியல் புகாரில் குமரி மாவட்ட தவெக நிர்வாகி கைது
Updated on: 
1 min read

நாகர்கோவில்: கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குமரி மாவட்ட தவெக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி, தனது தோழியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். தக்கலை மருந்துகோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் அந்த வழியாக காரில் வந்துள்ளார்.

மாணவியின் தோழிக்கு ஏற்கெனவே அவர் அறிமுகம் என்பதால், ஊரில் கொண்டு விடுவதாக இருவரையும் தன்னுடன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். முதலில் மாணவியின் தோழி இறங்கி விட்ட நிலையில், மாணவியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.

வழியில் காரை நிறுத்திய கிறிஸ்டோபர் மாணவியிடம் அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியவாறு காரில் இருந்து குதிக்க முயற்சிக்கவே, மாணவியை காரில் இருந்து கிறிஸ்டோபர் கீழே இறக்கி விட்டுள்ளார். இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கிறிஸ்டோபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கிறிஸ்டோபரை போலீஸார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ட்ட அவரை நவம்பர் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கல்லூரி மாணவி பாலியல் புகாரில் குமரி மாவட்ட தவெக நிர்வாகி கைது
மானாமதுரையில் பள்ளி வளாகத்தில் நகைக்காக பெண் கொலை

X