பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைதான பிஹார் இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை

பிப்பின் மான்ஜி

பிப்பின் மான்ஜி

Updated on
1 min read

திருவள்ளூர்: கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டை - புதுப்​பேட்டையில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளை​யாடி கொண்​டிருந்த பிஹார் தம்​ப​தி​யின் 3 வயது பெண் குழந்​தை, பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டு, அங்​குள்ள முட்​புதரில் வீசப்​பட்​டிருந்​தது.

சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட குழந்தை கடந்த 15-ம் தேதி காலை உயி​ரிழந்​தது.

இதுதொடர்​பாக, கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், போக்​சோ, கொலை உள்​ளிட்ட 4 சட்​டப்​பிரிவு​களின் கீழ், புதுப்​பேட்டை பகு​தி​யில் தங்​கி​யிருந்த பிஹாரைச் சேர்ந்த பிப்​பின் மான்ஜியை (19) கைது செய்​து, கடந்த 15-ம் தேதி இரவு, பூந்​தமல்லி ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில், திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமா மகேஸ்​வரி முன்பு ஆஜர்​படுத்​தினர்.

அப்​போது, ஜூன் 29-ம் தேதிவரை பிப்​பின் மான்​ஜியை சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, பிப்​பின் மான்​ஜி, சென்​னை, புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

நீதிபதி உமா மகேஸ்​வரி, பிப்​பின் மான்​ஜியை ஒரு​நாள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனு​மதி அளித்​தார். விசா​ரணை முடிந்து நேற்று இரவு திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ நீதி​மன்​றத்​தில் பிப்​பின் மான்​ஜியை ஆஜர்​படுத்​திய போலீ​ஸார், நீதிப​தி​யின்​ உத்​தர​வின்​ பேரில்​ மீண்​டும்​ புழல்​ சிறை​யில்​ அடைத்​தனர்​.

<div class="paragraphs"><p><em><strong>பிப்பின் மான்ஜி</strong></em></p></div>
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in