ஆயுதப்படை தலைமையகத்தில் அலுவலக உதவியாளரை தாக்கிய பெண் டிஐஜி: விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவு

ஆயுதப்படை தலைமையகத்தில் அலுவலக உதவியாளரை தாக்கிய பெண் டிஐஜி: விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் இயங்கி வரும் ஆயுதப்படை தலை​மையகத்​தில் அலு​வலக உதவி​யாளரை பெண் டிஐஜி தாக்​கிய​தாகக் கூறப்​படும் விவ​காரம் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழக காவல் துறை​யில் பல்​வேறு பிரிவு​கள் உள்​ளன. அதில் முக்​கிய​மான பிரிவு​களில் ஒன்று ஆயுதப்​படை. கலவரம், அசா​தாரண சூழல் அல்​லது வன்​முறை ஏற்​படும் நேரங்​களில் அவற்றை ஒடுக்க இந்த படை பயன்​படுத்​தப்​படு​கிறது.

மேலும், விஐபிக்​கள் வரு​கை, திரு​விழாக்​கள், பண்​டிகைகள் மற்​றும் பெரிய பொதுக்​கூட்​டங்​களுக்​குப் பாது​காப்பு அளித்​தல், கைதி​களை சிறையி​லிருந்து நீதி​மன்​றத்​துக்கு அழைத்​துச் செல்​லுதல், சட்​டம்​-ஒழுங்கு பணி​யில் போலீ​ஸாருக்கு உதவி​யாக செயல்​படு​தல் உட்பட பல்​வேறு பணி​களை ஆயுதப்​படை பிரிவு போலீ​ஸார் மேற்​கொள்​கின்​றனர். இப்​பிரி​வின் தலைமை அலு​வல​கம் சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்​ளது.

இங்கு டிஐஜி-​யாக பெண் ஐபிஎஸ் அதி​காரி ஒரு​வர் உள்​ளார். அவர் மன அழுத்​தத்​துக்கு சிகிச்சை பெற்​ற​தாக கூறப்​படு​கிறது. மேலும் உடல் நலமும் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். இதனால் அவரை போலீஸ் உயர் அதி​காரி​கள் மிக முக்​கியப் பணி​களில் அமர்த்​தாமல் ஆயுதப்​படைப் பிரி​வில் பணி​யாற்ற அறி​வுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

கோப்​பு​களை வீசி

இவர் பணி​யில் இருந்​த​போது, கோப்​பில் கையெழுத்து வாங்க வந்த அலு​வலக ஆண் உதவி​யாளர் (அமைச்​சுப் பணி​யாளர்) ஒரு​வரது செயல் பெண் டிஐஜி-க்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்​தி​ய​தாம்.

இதனால், கோபம் அடைந்த பெண் டிஐஜி, அலு​வலக உதவி​யாளர் மீது கோப்​பு​களை வீசி எறிந்​த​தாக​வும், காலணி​யால் தாக்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது. இதைத் தொடர்ந்து அந்த அலு​வலக உதவி​யாளர் அவரது சங்க நிர்​வாகி​களிடம் முறை​யிட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில் சம்​பந்​தப்​பட்ட பெண் ஐபிஎஸ் அதி​காரி, டிஜிபி-​யிடம் இந்த விவ​காரம் தொடர்​பாக மனு அளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய டிஜிபி மற்​றும் சென்னை காவல் ஆணை​யர் தனித்​தனி​யாக உத்​தர​விட்​டுள்​ளனர். இதை அடிப்​படை​யாக வைத்து அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

ஆயுதப்படை தலைமையகத்தில் அலுவலக உதவியாளரை தாக்கிய பெண் டிஐஜி: விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவு
எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகரமாகியுள்ள குப்பை கழிவுகளை ஜூன் 14-க்குள் அகற்ற உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in