சென்னையில் பெண்ணிடம் 155 பவுன் பறித்த போலி வழக்கறிஞர் கைது

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்
கைதான போலி வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்

கைதான போலி வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்

Updated on
1 min read

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர், கடந்த 2024-ம் ஆண்டு தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (27) என்பவர் அப்பெண்ணுக்கு அறிமுகமானார்.

தான் ஒரு வழக்கறிஞர் என்றும், அப்பெண்ணின் தம்பியின் நண்பர் என்றும் கூறிக்கொண்டு அவரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், அப்பெண்ணுக்குத் தெரியாமல் அவரது அந்தரங்கப் படங்களை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.

இதற்கிடையில், உறவினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையால் அப்பெண் அவரது கணவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இது ஹரிகிருஷ்ணனுக்கு பிடிக்காததால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி 155 பவுன் தங்க நகைகளை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் மேலும் நகைகளை கொடுக்க முடியாது என அப்பெண் தெரிவித்ததில். ஆத்திரம் அடைந்த அவர் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த பெண், ஹரிகிருஷ்ணன் குறித்து விசாரித்ததில், அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும், ஏமாற்றி நகைகளைத் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, அவரை கைது செய்தனர்.

<div class="paragraphs"><p>கைதான போலி வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்</p></div>
தவெக என்றால் தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in