பாரிமுனையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: 22 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது

Updated on: 
1 min read

சென்னை: பாரிமுனை​யில் ஆட்டோ ஓட்​டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடு​பட்ட சரித்​திரப் பதிவேடு குற்​றவாளியை போலீஸார் கைது செய்​தனர்.

பெரம்​பலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த பழனி என்​பவர், சென்னை பிராட்வே பகுதி​யில் ஆட்டோ ஓட்டி வரு​கிறார். கடந்த 3-ம் தேதி இரவு, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை​யில் உள்ள டீக்​கடையில் நின்​றிருந்​த​போது, அங்கு வந்த சோழிங்​க நல்​லூர், எழில் நகரைச் சேர்ந்த கோபி (27) என்​பவர், பழனி​யிடம் பணம் கேட்டு மிரட்டி உள்​ளார். பழனி பணம் தராததால் ஆத்​திரமடைந்த கோபி, அவரைத் தாக்​கியதுடன், அவர் வைத்​திருந்த ரூ.200 பணத்​தையும் பறித்​துக்​கொண்டு கொலை மிரட்​டல் விடுத்​துச் சென்​றுள்​ளார்.

இது​குறித்து பழனி அளித்த புகாரின்​பேரில், எஸ்பிளனேடு போலீஸார் வழக்​குப் பதிவு செய்து கோபியை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவர் எஸ்பிளனேடு காவல் நிலை​யத்​தின் சரித்திரப் பதிவேடு குற்​றவாளி என்​ப​தும், இவர் மீது கொலை முயற்சி, வழிப்​பறி உள்​ளிட்ட சுமார் 22 குற்ற வழக்​கு​கள் இருப்பதும் தெரிய​வந்​தது. இதையடுத்து, கைது செய்​யப்​பட்ட கோபியை விசா​ரணைக்​குப் பின்​னர் போலீ​ஸார் சிறையில் அடைத்தனர்.

பாரிமுனையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி வழிப்பறி: 22 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது
தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

X