மேலூர் அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு; தாய், மகன் படுகாயம்

மேலூர் அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு; தாய், மகன் படுகாயம்
Updated on: 
1 min read

மதுரை: மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தாய், மகன் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகவாணி (42). இவரது வீட்டில் தீபாவளிக்காக முன்கூட்டியே பட்டாசு வெடிகள் வாங்கி வைத்து இருந்தாக கூறப்படுகிறது.

இதனிடையே, வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த யோகவாணி, அவரது மகன் லோகேஷ் (20) மற்றும் அவரது நண்பர் மனோஜ் (20) ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.

மூவரும் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் யோகவாணி, அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

லோகேஷ், மனோஜ் இருவரும் மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர் அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு; தாய், மகன் படுகாயம்
மூன்று நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

X