Published : 06 Mar 2023 07:04 AM
Last Updated : 06 Mar 2023 07:04 AM

சென்னை | போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.5.9 கோடி வசூல்

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 6 வாரத்தில் ரூ.5.9 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பலர் அபராதத்தைச் செலுத்தாததால் நீதிமன்றத்தில் 7,417 மது போதை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த பிப்.26-ம்தேதி முதல் மார்ச்.4-ம் தேதி வரை அபராதம் செலுத்தாதவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 10 கால் சென்டர்களில் இருந்து 810 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.83 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 6 வாரங்களில் மட்டுமே கால் சென்டர்கள் மூலம் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x