Published : 04 Jan 2023 07:01 AM
Last Updated : 04 Jan 2023 07:01 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் சங்கீதா அருளரசன். இவரது மகள் ஓவியா(15) விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவரை அழைத்து வர உறவினரான குமாரசாமி என்பவர் 3 வயதான தனது பேரன் தருணுடன் சென்றார். பள்ளியில் இருந்து மூவரும் மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரி, கோமங்களம் பகுதியில் மொபட் மீது மோதியது. இதில், பயணித்த 3 பேரும் அங்கேயே இறந்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை வேப்பூர் போலீஸார் மடக்கியபோது, லாரி ஓட்டுநர் மணிகண்டன் அதிக மது போதையில் இருந்தது தெரியவந்தது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT