Published : 03 Jan 2023 09:20 PM
Last Updated : 03 Jan 2023 09:20 PM

சென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய வெளி மாநில நபர் கைது

கோப்புப்படம்

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் சென்னையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பிய வெளி மாநில நபரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து லேப்டாப், 5 செல்போன்கள் மற்றும் Airpods ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி: கடந்த 02.12.2022, அன்று D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய முகவரிக்கு ஒரு அஞ்சல் அட்டை (Postcard) வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்தபோது அதில் சென்னையில் வருகிற 25.12.2022 மற்றும் புத்தாண்டில் வெடி குண்டு வெடிக்க போவதாக மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது. பின்பு அந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தின் பேரில் D-1 திருவல்லிக்கேணி நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டது,

திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் மேற்படி வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கர்நாடகா மாநிலம் தர்மஸாலா என்ற ஊரிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என தெரிய வந்தது . இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபரை விரைந்து கண்டுபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தபால் அனுப்பிய நபரை தேடி உரிய விலாசங்களை கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களுர், மங்களுர், தர்மஸாலா, தக்ஷின் கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை செய்தும் பின்பு அஞ்சல் அனுப்பப்பட்ட தபால் நிலையமான தர்மஸாலா சென்று CCTV பதிவுகளை ஆய்வு செய்தும், பின்பு தபால் அனுப்பிய நபரின் அலைபேசி எண்கள் கண்டறிந்து அதனடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில் கைதான அனுமந்தப்பா

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனுமந்தப்பா, (41), த/பெ.லிங்கப்பா, கமலாபுரம், ஹோஸ்பேட் தாலுக்கா, தக்க்ஷின், கர்நாடகா மாநிலம் என்பவரை, சென்னை, ரிச்சி தெருவில் திருட்டு மின்னணு பொருட்களை விற்பனை செய்ய வந்த போது தனிப்படை காவல் குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனுமந்தப்பாவிடமிருந்து பெங்களூருவில் திருடப்பட்ட 1 லேப்டாப், 5 செல்போன்கள் மற்றும் 1 Airpods ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட அனுமந்தப்பா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x