Published : 28 Dec 2022 04:35 AM
Last Updated : 28 Dec 2022 04:35 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் நண்பர்களே அவரைக் கொலை செய்தது தெரியவந்தது.
காளையார்கோவில் குமரன்தெருவைச் சேர்ந்த செல்வராஜ்மகன் மகி (எ) மகேஸ்வரன் (23).டிச.25-ம் தேதியில் இருந்து அவரை காணவில்லை. இதையடுத்து அவரதுதாயார் பாண்டிமீனாள் அளித்தபுகாரின் பேரில், காளையார் கோவில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கீழவளையம்பட்டி கண்மாய் அருகேயுள்ள கிணற்றில் மகேஸ் வரன் உடல் கிடந்தது தெரியவந்தது.
அதை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டனர். தொடர் விசாரணையில் மகேஸ்வரனை அவரது நண்பர்கள் கீழவளையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38), மனோஜ்குமார் (21) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மனோஜ்குமாரை கைது செய்த போலீஸார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: கடந்த டிச.25-ம் தேதி கீழவளையம்பட்டி கண்மாயில் மகேஸ்வரன், மணிகண்டன், மனோஜ்குமார் ஆகியோர் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரனை மணிகண்டன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அதன்பிறகு மணிகண்டனும், மனோஜ்குமாரும் சேர்ந்து மகேஸ்வரன் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அருகேயுள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர், என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT