Published : 12 Aug 2022 07:30 AM
Last Updated : 12 Aug 2022 07:30 AM

குன்றத்தூர் | மனைவியை கொன்றதாக கணவர் போலீஸில் சரண்

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டை யைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அலமேலு. முன்னாள் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று மகள்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் தம்பதியர் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கடப்பாறையால் மனைவியை தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

விசாரணை குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, மனைவியின் மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு அலமேலு சென்றுவிட்டார். அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம்தான் வீட்டுக்கு ரமேஷ் அழைத்து வந்துள்ளார்.

சந்தேகத்தால் இந்த கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x