Published : 09 Jul 2022 06:02 AM
Last Updated : 09 Jul 2022 06:02 AM
மதுரை: மதுரையில் தான் காதலித்த பெண்ணை வேறொரு வருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் நிச்சயித் ததால், அப் பெண்ணை வீடு புகுந்து கொலை செய்த நபரைத் தேடி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதி பொன்மேனி குடி யானவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. பலசரக்குக் கடை வைத்துள்ளார். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் அபர்னா (19). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
இவரும், விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரும், சில மாதமாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதையறிந்த பெற்றோர் அபர்னாவை உறவினர் வழியில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.
நேற்று காலை பாண்டி கடைக்குச் சென்று விட்டார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். இளைய மகள் பள்ளிக்குச் சென்றார். வீட்டில் அபர்னா மட்டும் இருந்தார். மாலை 5 மணிக்கு தாயார் வீடு திரும் பியபோது கத்தி குத்து காயங்களுடன் அபர்னா இறந்து கிடந்தார். இதைப் பார்த்து தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையர் சீனிவாசப் பெருமாள், உதவி ஆணையர் ரவீந்திரநாத் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள ஹரிகரனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT