Published : 24 Jun 2022 07:31 AM
Last Updated : 24 Jun 2022 07:31 AM

மடிப்பாக்கம் காவல் எல்லையில் வழிப்பறி அதிகரிப்பு: குற்ற சம்பவங்களைக் குறைக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளிலுள்ள கடைகளைக் குறிவைத்து திருட்டு கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. குறிப்பாக பாலாஜி நகர் மெயின் ரோடு பகுதியில் இளைஞர்களை மிரட்டி, கத்தியை காட்டி பணம் செல்போன் பறித்துள்ளனர்.

இதேபோல் நியூ இந்தியா காலனியில் செயின் பறிப்பு சம்பவம், மேடவாக்கம் மெயின் ரோடு, சுவாமி நகர், மெயின் ரோடு,பாலம்மாள் நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களைக் குறைக்க போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: குற்ற சம்பவங்களைக் குறைக்க தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

சமீபத்தில் பல இடங்களில் கடைகளை உடைத்து கொள்ளை அடித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம்.

போலீஸார் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பாதுகாப்பு பணிக்கு செல்வதால் வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x