Published : 22 Jun 2022 08:12 AM
Last Updated : 22 Jun 2022 08:12 AM
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர் ஒருவரின் குடும்பத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், சிதம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 3-ம் தேதி சிதம்பரம் கீழ வீதியில் உள்ள எம்.எஸ் பாடசாலை மண்டபத்தில் திருமணம் நடந்ததாகவும், 5-ம் தேதி மற்றொரு திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி சிவராம தீட்சிதர், பானுசேகர் தீட்சிதர், கபிலன் தீட்சிதர் ஆகிய 3 பேர் மீது குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT