Published : 19 Jun 2022 04:15 AM
Last Updated : 19 Jun 2022 04:15 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே விவசாயியின் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.1.55 லட்சத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரூர் வட்டம் கோட்டப்பட்டி அடுத்த பாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன் (55). இவர் தீர்த்தமலையில் செயல்படும் தேசிய வங்கி ஒன்றில் நகை அடமானம் வைத்திருந்தார். அதை மீட்க ரூ.1.55 லட்சம் பணத்துடன் சென்றார். வங்கியில் அதிக அளவில் வாடிக்கையாளர் கூட்டம் இருந்ததால் வீடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் மளிகைக் கடை ஒன்றின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய பின்னர் வண்டியின் பெட்டியில் பார்த்தபோது ரூ.1.55 லட்சம் பணம், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை ஆகியவை அடங்கிய பை மாயமாகி இருந்தது. எனவே, இது தொடர்பாக பரந்தாமன் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT