Published : 17 Jun 2022 06:55 AM
Last Updated : 17 Jun 2022 06:55 AM

தூத்துக்குடி | கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆத்தூர் அருகே தலைவன்வடலி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சண்முகராஜா (45) . உப்பளத் தொழிலாளியான இவர், கடந்த மே மாதம் 29-ம் தேதி பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தலைவன்வடலி சேதுராஜா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மோகன சபரிநாத் என்ற சபரி (21), திருமலை மகன் கார்த்திக் (21) மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் உதயமூர்த்தி என்ற மூர்த்தி (19) ஆகியோரை ஆத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x